ஆமை வேகம்...அலட்சியம் : மெட்ரோ ரயில் பணிகளால் தீரா துயரத்தில் மக்கள் - சிறப்பு தொகுப்பு!
Nov 5, 2026, 05:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆமை வேகம்…அலட்சியம் : மெட்ரோ ரயில் பணிகளால் தீரா துயரத்தில் மக்கள் – சிறப்பு தொகுப்பு!

Murugesan M by Murugesan M
May 15, 2025, 07:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை மாநகரில் ஆமை வேகத்தில் நடைபெறும் மெட்ரோ ரயில் பணிகளால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். சாலையோரங்களில் நிறைந்திருக்கும் ராட்சத கருவிகளும் சாலைகளில் போடப்பட்டிருக்கும் பள்ளங்களும் விபத்து ஏற்படுவதற்கான அபாயத்தை உருவாக்கியுள்ளது.

மழைநீர் வடிகால் பணிகள், பாதாளச் சாக்கடைத் திட்டம், குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி, சாலைப்பணி என ஒரே நேரத்தில் முறையான ஒருங்கிணைப்பின்றி நடைபெறும் பணிகள் சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலுக்கான அடிப்படை காரணமாக அமைந்திருக்கின்றன. அதோடு எந்தவித திட்டமிடலுமின்றி நடைபெறும் மெட்ரோ பணிகளும் இணைந்திருக்கிறது.  மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்காக எந்தவித  மாற்றுச்சாலைகள் ஏற்பாடுகளின்றி பல சாலைகள் மூடப்பட்டிருப்பது வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையின் மையப்பகுதிகளாகத் திகழும் வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர் போன்ற இடங்களில் மெட்ரோ பணிகள் ஆமைவேகத்தில் நடைபெற்று வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. சில இடங்களில் பணி முடிக்கப்பட்ட சாலைகளில் ஏற்பட்ட பள்ளங்களும் மூடப்படாமல் இருப்பது விபத்தை உண்டாக்கும் ஆபத்தான சூழலை உருவாக்கியுள்ளது.

பரபரப்பாக இயங்கும் சென்னையில் பணிக்குச் செல்லும் அவசரத்தில் பயணிப்போருக்கு மெட்ரோ ரயில் பணிகள் தடையாக இருப்பதும், குறுகலான சாலைகளின் இருபுறமும் ராட்சத கருவிகளைப் போட்டு போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எந்த பணிகளையும் மேற்கொள்ளாமல் பல இடங்களில் தடுப்புகளைப் பல மாதங்களாக வைத்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வருவதாகவும் வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

போக்குவரத்து நெரிசலால் தினசரி பல இன்னல்களைச் சந்திக்கும் பாதசாரிகள், ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குச் செல்ல திட்டமிடும் போது முன்கூட்டியே கூடுதல் நேரத்தை ஒதுக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். வளர்ந்து வரும் சென்னை போன்ற நகரங்களுக்கு மெட்ரோ ரயில் அவசியம் தான் என்றாலும் அதற்காக மேற்கொள்ளப்படும் பணிகளை முறையாகத் திட்டமிட்டு வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்தாத வகையில் மேற்கொள்வதில் மெட்ரோ ரயில் நிர்வாகமும் தமிழக அரசும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.

Tags: Chennai Metro trainTurtle speed...indifference: People in extreme distress due to metro rail workமெட்ரோ ரயில் பணிchennai metro work
Share
Tweet
SendShare
Previous Post

காட்சிப் பொருளான இ-சேவை மையங்கள் – சிறப்பு தொகுப்பு!

Next Post

வக்பு சட்டத்திருத்தத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு : 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Related News

அமெரிக்க இடைக்கால தேர்தலில் சாதித்த இந்திய வம்சாவளியினர் : சாதனை தொகுப்பு!

மேலூர் அருகே வீட்டில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறி விபத்து – கல்லூரி மாணவர் பலி!

சிலை கடத்தல் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் மாயமான விவகாரம் – உச்ச நீதிமன்றம் அதிருப்தி!

தீபாவளி பண்டிகை – தீவுத்திடலில் களைகட்டிய பட்டாசு விற்பனை!

சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் இணைப்புக் கல்லூரிகளில் எம்.ஏ கிறிஸ்தவ படிப்புகளுக்கு அங்கீகாரம் தொடர்பாக விவாதமா? – துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கண்டனம்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க இடைக்கால தேர்தலில் தோல்வி ஏன்? – அதிபர் ட்ரம்ப் விளக்கம்!

அமெரிக்க இடைக்கால தேர்தல் – ஜனநாயக கட்சி அபார வெற்றி!

தவெக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு – ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணர்வகள் – முதலமைச்சர் விஜய் விருது வழங்கி பாராட்டு!

தமிழகம் முழுவதும் 15,659 தீபாவளி சிறப்புப் பேருந்துகள் – இன்று முதல் இயக்கம்!

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு வரும் 6ம் தேதி வரை நீதிமன்ற காவல் – சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்; மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

அக்னி வீரர்களின் சேவைக்காலம் நீட்டிப்பு; முப்படை தலைமைத் தளபதி

தென் சீன கடலில் சீன ராணுவ ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி : வியட்நாமுடன் புதிய வியூகம் அமைத்த அஜித் தோவல் – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்க நாடாளுமன்ற இடைக்கால தேர்தல் முடிவுகளை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன் – ட்ரம்ப் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies