S-400, பிரம்மோஸ் சூப்பர் : இந்திய ராணுவத்திற்கு ரஷ்ய துாதர் பாராட்டு!
Sep 13, 2026, 04:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

S-400, பிரம்மோஸ் சூப்பர் : இந்திய ராணுவத்திற்கு ரஷ்ய துாதர் பாராட்டு!

Murugesan M by Murugesan M
Jun 2, 2025, 03:37 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆப்ரேஷன் சிந்தூரில்  S-400  மற்றும் பிரம்மோஸ் ஏவுகணைகளின் செயல்திறன் சிறப்பாக இருந்ததாகப் பாராட்டியுள்ள இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ், கூடுதல் S-400 வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்குவது குறித்து இரு நாடுகளுக்கிடையே  பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் உறுதிப்படுத்தியுள்ளார்.  அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத தளங்களையும் முகாம்களையும் குறிவைத்து ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில்  துல்லியமான தாக்குதல்களை இந்தியா நடத்தியது. பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பை ஊடுருவி இந்திய இராணுவம் ஆப்ரேஷன் சிந்தூரின் நோக்கத்தைச் சரியாக நிறைவேற்றியது.

அதனையடுத்து, பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகளையும் ட்ரோன்களையும், நடுவானிலேயே இந்தியா முறியடித்தது. இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பை ஊடுருவ முடியாமல் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது.  இந்த பெருமை, S-400 வான் பாதுகாப்பு அமைப்பைச் சார்ந்தது என்று உலக அளவில் பாராட்டப் பட்டது.

இந்நிலையில் இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ், ஆப்ரேஷன் சிந்தூரில் S-400 வான் பாதுகாப்பு அமைப்பு மற்றும்  பிரம்மோஸ் ஏவுகணைகளின் செயல்திறன் சிறப்பாக இருந்தது என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து தங்கள் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் ஒத்துழைத்து வருகின்றன என்றும் கூறியுள்ளார்.

S-400 வான் பாதுகாப்பு அமைப்பின் விநியோகம், T-90 டாங்கிகள் மற்றும் Su-30 MKI போர் விமானங்களின் உரிமம் பெற்ற உற்பத்தி, MiG-29 மற்றும் Kamov ஹெலிகாப்டர்களின் விநியோகம், INS விக்ரமாதித்யா பரிமாற்றம், இந்தியாவில் AK-203 துப்பாக்கிகளின் கூட்டு உற்பத்தி மற்றும் BrahMos ஏவுகணைகளின் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு இருதரப்பு திட்டங்களில் இருநாடுகளும் ஈடுபட்டுள்ளன.

இந்தியாவில் BrahMos ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட மாடலின் உற்பத்திக்கு ரஷ்யா தனது விரிவான தொழில்நுட்பத் திறனை  இந்தியாவுக்கு வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. இதற்கான பேச்சு வார்த்தைகளில் இருநாடுகளும் ஈடுபட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, உத்தரப்பிரதேசத்தில், புதிய மேம்பட்ட அதிநவீன BrahMos ஏவுகணை உற்பத்தி ஆலை கட்டப் படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக,2018 ஆம் ஆண்டு ‘சுதர்சன சக்ரம்’ என்று இந்திய ராணுவத்தால் அழைக்கப்படும் S-400  வான் பாதுகாப்பு அமைப்புகளில் ஐந்தை வாங்க இந்தியா ஒப்புக்கொண்டது. இது தொடர்பான இருநாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் 5.43 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. 2019-க்குப் பிறகு,   S-400 வான் பாதுகாப்பு அமைப்பை இந்தியா வாங்கியது.

அமெரிக்காவின் பேட்ரியாட் ஏவுகணை வான் பாதுகாப்பு அமைப்புக்கு இணையான S-400  நகரும் வான் பாதுகாப்பு அமைப்பாகும்.  சாலை வழியாகக் கொண்டு செல்ல முடியும் மற்றும் 5 முதல் 10 நிமிடங்களுக்குள் இதைப் பயன்படுத்த முடியும் என்பது இதன் சிறப்பம்சம் ஆகும்.

Tags: S-400 வான் பாதுகாப்புS-400Brahmos Super: Russian Ambassador praises Indian Armyரஷ்ய துாதர் பாராட்டுபிரம்மோஸ் சூப்பர்
Share
Tweet
SendShare
Previous Post

சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

Next Post

வரும் 4-ம் தேதி மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies