ஏர் இந்தியா விமான விபத்து : FUEL SWITCH காரணமா? - வெளியான புதிய தகவல்!
Sep 14, 2026, 01:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஏர் இந்தியா விமான விபத்து : FUEL SWITCH காரணமா? – வெளியான புதிய தகவல்!

Murugesan M by Murugesan M
Jul 9, 2025, 09:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜூன் மாதம் நிகழ்ந்த அகமதாபாத் விமான விபத்துக்கு FUEL SWITCH-ல் ஏற்பட்ட கோளாறு காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. FUEL SWITCH என்றால் என்ன? அதற்கும் விமான விபத்துக்கும் என்ன தொடர்பு? விரிவாகப் பார்க்கலாம்.

242 பேருடன் வானை நோக்கிப் பறந்து சென்ற விமானம் அடுத்த சில விநாடிகளிலேயே தொடர்ந்து இயங்க முடியாமல் தடுமாறியது. பதறிப்போன PILOT “MAY DAY” எனப்படும் அபாயச் செய்தியைக் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பினார்.

இருப்பினும் அந்த விமானம் அருகில் இருந்த மருத்துவக் கல்லூரி விடுதி மீது மோதி தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில் 260 பேர் பலியானார்கள். ஜூன் 12-ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து லண்டனுக்குப் புறப்பட்ட AIR INDIA விமானத்தின் சோகக்கதைதான் இது.

மிகவும் பாதுகாப்பானது என்று கூறப்பட்ட BOEING 787 DREAMLINER விமானம் விபத்தில் சிக்கியது இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட குழு கருப்பெட்டியில் பதிவான தகவல்களை ஆய்வு செய்தது. அதில் கிடைத்த விவரங்களின் அடிப்படையில் முதற்கட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் வழங்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விமானத்தின் ENGINE-க்கு எரிபொருள் செல்வதைக் கட்டுப்படுத்தும் FUEL SWITCH-ல் ஏற்பட்ட கோளாறே விபத்துக்குக் காரணம் என விசாரணை அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

விமானத்தின் COCKPIT-ல் வேகத்தைக் கட்டுப்படுத்தும் LEVER-க்கு கீழேதான் இந்த FUEL SWITCH இருக்கும். ENGINE-ஐ START செய்வதும் அதன் இயக்கத்தை நிறுத்துவதும் FUEL SWITCH-ன் வேலை. இவ்வளவு முக்கியமான பணியைச் செய்வதால் தப்பித்தவறிக்கூட அதன் மீது கைபட்டுவிடக்கூடாது என்பதற்காக FUEL SWITCH-ஐ சுற்றி BRACKET அமைக்கப்பட்டிருக்கும்.

ENGINE-க்குச் செல்லும் எரிபொருள் திடீரென நிறுத்தப்பட்டால் அதன் இயக்கம் தடைப்பட்டுப் பறப்பதற்குத் தேவையான உந்துசக்தியை விமானம் இழக்கக்கூடும். மேலும் GENERATOR-களின் இயக்கமும் தடைப்படுவதால் மின்சாரம் இன்றி COCKPIT-ல் இருக்கும் DISPLAY-கள் செயலிழந்துவிடும்.

விமானத்தின் இயக்கத்தில் முக்கியப் பங்காற்றும் FUEL SWITCH,  ENGINE-க்குச் செல்லும் எரிபொருளை திடீரென நிறுத்தியதால் விபத்து ஏற்பட்டதாகக் கூறப்பட்டாலும், அது எப்படி நிகழ்ந்தது என்பதைக் கண்டறிய முடியவில்லை.

தவறுதலாகவோ, திட்டமிட்டோ FUEL SWITCH-ஐ இயக்கியதற்கான ஆதாரங்கள் கருப்புப் பெட்டியில் இல்லை என விசாரணைக்குழு தெரிவித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அதேபோல் FUEL SWITCH-ல் ஏற்பட்ட பிரச்சனைக்கு மனிதத் தவறு காரணமாக இருக்க முடியாது என அமெரிக்காவைச் சேர்ந்த வல்லுநர்களும் தெரிவித்துள்ளனர். எனவே அடுத்தடுத்த விசாரணைகளில் விமான விபத்துக்கான காரணம் கண்டறியப்படலாம்.

Tags: Gujratair india flightflight accidentAir India flight crash: Was FUEL SWITCH the cause? - New information released
Share
Tweet
SendShare
Previous Post

இறக்குமதி தாமிரம் 50%, மருந்து 200% – ட்ரம்ப் வரி எச்சரிக்கை இந்தியாவுக்கு பாதிப்பா?

Next Post

ஈரான் தலையில் கட்டிய சீனா : பாகிஸ்தானில் பலிக்காத HQ-9B பாதுகாப்பு அமைப்பு!

Related News

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies