அழிவின் விளிம்பில் "சென்னிமலை போர்வைகள்" கைகொடுக்குமா அரசு?
May 6, 2026, 05:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அழிவின் விளிம்பில் “சென்னிமலை போர்வைகள்” கைகொடுக்குமா அரசு?

Murugesan M by Murugesan M
Jul 15, 2025, 09:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோட்டில் புகழ்பெற்ற சென்னிமலை போர்வைகள் விற்பனையாகாமல் தேங்கிக் கிடப்பதால்  உற்பத்தியாளர்கள் வேதனை அடைந்துள்ளனர். அழிவின் விளிம்பில் உள்ள இந்த தொழிலை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர். இதுகுறித்து ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை சுற்றுவட்டாரங்களில் தயாரிக்கப்படும் போர்வைகள் நீண்ட கால பாரம்பரியம் கொண்டவை. கைத்தறி மற்றும் விசைத்தறி மூலம் உருவாகும் சென்னிமலை போர்வைகளைப் பலரும் போட்டிப் போட்டு வாங்கிச் சென்றது முன்பொரு காலம்…ஆனால் இப்போது நிலைமை அப்படியில்லை.

தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் ஏன் வெளிநாடுகளுக்கும் கூட சென்னிமலை போர்வைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்த தொழிலை நம்பி பல லட்சம் தொழிலாளர்களும் உள்ளனர். ஆனால் கொரோனா காலத்திற்குப் பிறகு சென்னிமலை போர்வைகள் உற்பத்தி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது.

அதன் பிறகும் வருடத்திற்கு வருடம் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து  வருவதால்  போர்வைகள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளன.  வட மாநிலங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் இங்கிருந்து நடைபெற்ற ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது.

வடமாநிலங்களில் போர்வை உற்பத்தியும் அதிகரித்துள்ளதால் சென்னிமலை போர்வைகளை வாங்குவதை அங்குள்ள நிறுவனங்கள் தவிர்த்து வருகின்றன. வெளிநாடுகளுக்கும் போர்வைகளை ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் 20 கோடி ரூபாய் மதிப்பிலான சென்னிமலை போர்வைகள் தேக்கமடைந்துள்ளன.

ஈரோடு, சென்னிமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில்  50 ஆயிரத்துக்கு மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் இருந்து வந்த நிலையில், தற்போது பாதியாகக் குறைந்து 25 ஆயிரம் விசைத்தறி கூடங்களே செயல்பட்டு வருகின்றன.  தொழில் நலிவடைந்து வருவதால் விசைத்தறி இயந்திரங்கள் உடைக்கப்பட்டு பழைய இரும்பு கடைக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது சந்தையில் விசைத்தறி கூடங்களைத் தாண்டி பிரிண்டட் போர்வைகள் விற்பனைக்கு வருவதும் சென்னிமலை போர்வைகள் உற்பத்தி தொழிலுக்கு பெரும் சவாலாக இருக்கிறது.

பொங்கல் பண்டிகை காலங்களில் வீடுகளுக்கு வேட்டி, சேலை கொடுப்பது போல் தீபாவளி காலங்களில் ஒவ்வொரு வீட்டிற்கும் போர்வை வழங்கும் திட்டத்தைத் தமிழக அரசு அமல்படுத்தினால் விசைத்தறி கூடங்களை காக்க முடியும் எனவும் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கலாம் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

இதே நிலை நீடித்தால் சென்னிமலை போர்வைகள் உற்பத்தி தொழில் அழிந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே விசைத்தறி தொழிலாளர்களின் நலனைப்  பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே உற்பத்தியாளர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Tags: ழிவின் விளிம்பில் சென்னிமலை போர்வைகள்சென்னிமலைஈரோடு மாவட்டம்அரசு"Chennai Mountain Blankets" on the verge of extinction Will the government help?சென்னிமலை போர்வைகள்
ShareTweetSendShare
Previous Post

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்!

Next Post

ரயில் விபத்தால் கரும்புகை : கண் எரிச்சல், மூச்சு திணறலால் தவித்து வரும் திருவள்ளூர் மக்கள்!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies