ஐரோப்பாவை பொசுக்கும் "SILENT KILLER" - 10 நாட்களில் 2300 பேர் மரணம்!
Sep 22, 2026, 04:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ஐரோப்பாவை பொசுக்கும் “SILENT KILLER” – 10 நாட்களில் 2300 பேர் மரணம்!

Murugesan M by Murugesan M
Jul 14, 2025, 01:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஐரோப்பிய நாடுகளைச் சுட்டெரிக்கும் வெப்பத்தின் தாக்கத்தால் உயிரிழப்போரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தகிக்கும் வெயிலைச் சமாளிக்க முடியாமல் மக்கள் பரிதவித்து வருவது ஐரோப்பிய நாடுகளைக் கவலை கொள்ளச் செய்துள்ளது.

வரலாறு காணாத வெப்பம்… அனலைக் கக்கும் வெயில் என ஐரோப்பிய நாடுகளைக் கலங்க வைத்துள்ளது கோடைக்காலம்.

பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல் தொடங்கி பின்லாந்து, ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாகப் பதிவாகியிருக்கிறது. பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 105 டிகிரி பாரன்ஹீட் சுட்டெரித்த நிலையில், மார்ஷல் நகரில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டது. கடுமையான வெப்பம், வறட்சி போன்றவை காட்டுத் தீவிக்குத் தீனி போட்டதால் அது வனத்தையே கபளீகரம் செய்தது.

போர்ச்சுகலில் உள்ள மோரா நகரில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 138 டிகிரி பாரன்ஹீட் பதிவான வெப்பம் மக்கள் பரிதவிக்க வைத்துள்ளது. இதுதான்  ஐரோப்பாவில் இதுவரை பதிவான மிக அதிகபட்ச வெப்பநிலையாக மதிப்பிடப்பட்டுள்ளது. வெப்பம், அனல் காற்று போன்றவற்றால் ஐரோப்பிய மகள் பகல் நேரங்களில்  வீட்டிற்குள்ளேயே முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ள, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் அவசரக் கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுமக்கள் காலை 11 மணி முதல் 6 மணி வரை வெளியில் வருவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பிரான்ஸ் நாட்டின் மெட்டியோ, ஜெர்மனி நாட்டின் முனிச் போன்ற நகரங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், மாணவர்கள் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் வெப்பத்தின் தாக்கத்தினாலும், பல்வேறு உடல் உபாதைகளாலும் ஐரோப்பிய நாடுகளில் கடந்த 10 நாட்களில் மட்டும் இரண்டாயிரத்து 300 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

புவி வெப்பமயமாதல், தொழில்மயமாக்கல், புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாடு அதிகரிப்பு போன்றவை பருவநிலை மாற்றத்திற்கு வித்திடுவதால், அது வெப்ப அலைகள் தீவிரமடைவதற்கு வழிவகுத்து விடுவதாகக் கூறும் ஆய்வாளர்கள், உலக நாடுகள் இயற்கையைக் காப்பதற்கான முன்னெடுப்புகளைக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்துகிறார்கள்.

Tags: புவி வெப்பமயமாதல்தொழில்மயமாக்கல்ஐரோப்பாவை பொசுக்கும் வெப்பம்போர்ச்சுகல்ஸ்பெயின்பிரான்ஸ்"SILENT KILLER" sweeping Europe - 2300 people die in 10 daysSILENT KILLER
Share
Tweet
SendShare
Previous Post

குமரகிரி குமரனுக்கு எப்போது கும்பாபிஷேகம்? – முடங்கிக் கிடக்கும் திருப்பணிகள்!

Next Post

நடிகை சரோஜா தேவி காலமானார்!

Related News

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies