அகமதாபாத் விமான விபத்து : 10 வினாடிகள் மர்மம் நடந்தது என்ன?
Sep 13, 2026, 01:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அகமதாபாத் விமான விபத்து : 10 வினாடிகள் மர்மம் நடந்தது என்ன?

Murugesan M by Murugesan M
Jul 16, 2025, 09:05 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து குறித்த  புலனாய்வு அமைப்பின் முதற்கட்ட விசாரணை அறிக்கை வெளியாகி உள்ளது. காக்பிட்டில் எரிபொருள் சுவிட்ச்  ஆஃப் செய்யப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. ஏன் ஆஃப் செய்யப்பட்டது? யார் ஆஃப் செய்தது?  போன்ற பல்வேறு  கேள்விகளை இந்த விசாரணை அறிக்கை எழுப்பியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த ஜூன் 12ம் தேதி, ஏர் இந்தியா விமானம், அகமதாபாத்திலிருந்து லண்டனுக்குப் புறப்பட்டது. 11 ஆண்டுகள் பழமையான இந்த போயிங் 787-8  ட்ரீம்லைனர் விமானம் புறப்பட்ட 40 வினாடிகளுக்குள்  விபத்துக்குள்ளானது.

இதில் விமானத்தில் பயணம் செய்த 241 பேர் உயிரிழந்தனர். பிரிட்டனைச் சேர்ந்த ஒரு பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அகமதாபாத் சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள  மருத்துவக் கல்லூரி விடுதியில்   விமானம் மோதி வெடித்துச் சிதறியதில்,  மருத்துவ மாணவர்கள் உட்பட 33 பேர் உயிரிழந்தனர்.

இந்த விமான விபத்து, இந்தியாவில் ஏற்பட்ட மிக மோசமான , குழப்பான விமான விபத்துக்களில் ஒன்றாகக் கருதப் படுகிறது. இந்த விபத்து குறித்து  Aircraft Accident Investigation Bureau எனப்படும் விமான விபத்து புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது. ஏஏஐபி-ன் இயக்குநர் ஜெனரல் தலைமையில் நடைபெறும் இந்த விசாரணைக் குழுவில்  இந்திய விமானப் படை, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், அமெரிக்கத் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் ஆகியவற்றின் தொழில்நுட்ப வல்லுநர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், 15 பக்கம் கொண்ட முதற்கட்ட விசாரணை அறிக்கை வெளியாகி உள்ளது. அதில் ஓடுபாதையில் வேகத்தை அதிகரித்த ஏர் இந்தியா விமானம், புறப்பட்டு 58 வினாடிகள் கழித்து வானில் ஏறியது.

காற்றில் மிதக்கத் தொடங்கி, மூன்று வினாடிகளுக்குப் பிறகு, விமானத்தின் இரண்டு எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச்களும் CUT-OFF நிலைக்கு மாறியதால்  என்ஜின்களுக்கு எரிபொருள் செல்வது நின்று, இரண்டு என்ஜின்களும் முழுமையாகச் செயல் இழந்தது என்று கூறப்பட்டுள்ளது.

பொதுவாக, விமானம் தரை இறங்கிய பிறகே, எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச்கள் CUT-OFF நிலைக்கு மாற்றப்படும். கூடுதலாக, CVR எனப்படும் காக்பிட் குரல் பதிவில், ஒரு விமானி மற்றவரிடம், ஏன் CUT-OFF செய்தாய் என்று கேட்க, அதற்கு மற்றவர் நான் செய்யவில்லை என்றும் பதிலளிப்பதும் பதிவாகி உள்ளது. விமானம் புறப்படும் நேரத்தில், துணை விமானி விமானத்தை இயக்க, கேப்டன் கண்காணித்துக் கொண்டிருந்தார்.

உடனடியாக, RUN நிலைக்கு சுவிட்ச் நகர்த்தப்பட்டதைக் கருப்புப் பெட்டியில் பதிவான தரவுகள் தெரிவிக்கின்றன. பத்து வினாடிகள் கழித்து, ஒரு சுவிட்சும், அடுத்த நான்கு வினாடிகளில் மற்றொரு சுவிட்சும் RUN நிலைக்கு மாற்றப்பட்டன.

இதன் மூலம் விமானிகள் என்ஜின்களின் வேகத்தை மீட்டெடுக்க முயற்சித்தது தெளிவாகியுள்ளது. எரிபொருள் மீண்டும் இயக்கப்பட்ட பதின்மூன்று வினாடிகளுக்குப் பிறகு,  விமானி மேடே சிக்னல் அனுப்பியுள்ளார்.  வானில் ஏறிய 32 வினாடிகளுக்குப் பிறகு விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஏன் சுவிட்ச்கள் CUT-OFF நிலைக்கு மாறின என்பது பற்றியும்,  குரல்பதிவில் யார் கேள்வி கேட்டது? யார் பதில் அளித்தது என்பது பற்றியும், விபத்துக்கான காரணம் குறித்தும் முதல்கட்ட அறிக்கை எந்த முடிவுகளையும்  தெரிவிக்கவில்லை.

அறிக்கையின்படி, என்ஜினுக்கு எரிபொருள் போகவில்லை. அதற்கு எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச்கள் CUT-OFF  ஆனது தான் காரணம் என்று தெரிய வந்துள்ளது.   எப்படி CUT-OFF ஆனது? இதை விமானிகள்  செய்தார்களா? எந்த விமானி செய்தார் ? அல்லது வேறு யாராவது செய்தார்களா? யார் அவர்கள் ? அல்லது அல்லது விமானத்தின் மின்னணு கட்டுப்பாட்டு அலகில்  ஏற்பட்ட பிரச்சனையால் இரண்டு சுவிட்ச்களும் தானாக CUT-OFF ஆனதா? என்பது குறித்து கேள்விகளும் எழுந்துள்ளன.

2018ம் ஆண்டு டிசம்பரில், அமெரிக்க பெடரல் ஏவியேஷன் நிர்வாகம் ஒரு சிறப்பு விமானத் தகுதி அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், சில போயிங் 737 விமானங்களில் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச்களில் LOCK செய்யும் அம்சம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது.

அதாவது, எரிபொருள் சுவிட்ச்கள் விமானி இல்லாமல் RUN  மற்றும்  CUT-OFF நிலைகளுக்கு இடையே தானாகவே  நகரக்கூடும் என்று எச்சரித்திருந்தது. இந்தப் பிரச்சனை உள்ளது எனக் குறிப்பிடப் பட்டாலும் இது பாதுகாப்பற்ற நிலையாகக் கருதப்படவில்லை.

விமான விபத்துக்கு நாசவேலை காரணமாக இருப்பதற்கான உடனடி ஆதாரங்கள் எதுவும் இதுவரை இப்போதைக்கு இல்லை. வானம் தெளிவாக இருந்தது. அதிகமாகக் காற்றும் இல்லை. வானிலை பிரச்சினைகளும் இருக்கவில்லை. விமானிகள் ஆரோக்கியமும் தகுதியும் போதிய அனுபவமும் கொண்டவர்கள். தேவையான ஓய்வுக்குப் பிறகே விமானிகள் மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளனர் என்று  முதற்கட்ட விசாரணை அறிக்கை தெரிவித்துள்ளது.

ஏர் இந்திய விமான  விபத்துக்கான உண்மையான காரணம் என்ன? அந்த  10 வினாடிகள் மர்மம் என்ன ? என்பது தொடர் விசாரணையில் தெரிய வரலாம்.

Tags: air india flightAhmedabad plane crash: What happened in the mysterious 10 seconds?அகமதாபாத் விமான விபத்து newsflight accident news today
Share
Tweet
SendShare
Previous Post

வெற்றிகரமாக தரையிறங்கிய டிராகன் : பூமிக்கு திரும்பினார் சுபான்ஷு சுக்லா!

Next Post

பீகார் வாக்காளர் பட்டியலில் நேபாள், வங்கதேச நபர்கள் : தேர்தல் ஆணையம் “ஷாக்” ரிப்போர்ட்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies