அமெரிக்காவிற்கு முட்டை ஏற்றுமதி : நாமக்கல் உற்பத்தியாளர்கள் "குஷி"!
Oct 27, 2026, 05:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அமெரிக்காவிற்கு முட்டை ஏற்றுமதி : நாமக்கல் உற்பத்தியாளர்கள் “குஷி”!

Murugesan M by Murugesan M
Jul 16, 2025, 09:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாமக்கல் மாவட்டத்திலிருந்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட முட்டைகள் தற்போது முதன்முறையாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே தொடங்கியிருக்கும் முட்டை வர்த்தகம் பற்றியும், அதனால் ஏற்படும் பயன்கள் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.

முட்டைகளின் நகரம் என்று அழைக்கப்படும் நாமக்கல் மாவட்டம் இந்தியாவின் முட்டை ஏற்றுமதியில் சுமார் 95 சதவிகிதம் பங்கு வகிக்கிறது. நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சுமார் 1300 கோழிப்பண்ணைகளும், ஏழரை கோடி முட்டையிடும் கோழிகளும் உள்ளன.

இவற்றின் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் ஆறரை கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படும் நிலையில், அதற்கான விலையைத் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்திலிருந்து  பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட முட்டைகள் தற்போது முதன்முறையாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

அரசின் சத்துணவுத் திட்டத்தில் தொடங்கி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், அண்டை மாநிலங்கள், உலக நாடுகள் வரை நாமக்கல் முட்டை மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. ஓமன், மாலத்தீவு, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை, பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கு அதிகளவு முட்டைகள் நாமக்கல்லில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில் தற்போது முதன்முறையாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்திலிருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட 10 கோடி முட்டைகள் அங்கிருந்து 21 கண்டெய்னர்கள் மூலமாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது

நோய்த்தடுப்பு, தூய்மை, தடுப்பு மருந்து உள்ளிட்ட நடைமுறைகளைப் பின்பற்றிய பின்னர் ஏற்றுமதி செய்யப்படும் முட்டைகளுக்கு அமெரிக்காவில் உரியத் தரச்சான்று அளிக்கும் பட்சத்தில் அடுத்தடுத்தடுத்து பல கோடி முட்டைகளை அனுப்புவதற்கு வாய்ப்பாக அமையும் எனவும் முட்டை ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: Egg exports to America: Namakkal producers "Kushi"நாமக்கல் முட்டை உற்பத்தியாளர்கள்அமெரிக்காவிற்கு முட்டை ஏற்றுமதிamericausaEggநாமக்கல்
Share
Tweet
SendShare
Previous Post

தே.ஜ கூட்டணியில் இணையும் பாமக – குஷியில் தொண்டர்கள்!

Next Post

சாதகமா? பாதகமா? : பள்ளி வகுப்பறைகளில் ‘ப’ வடிவில் இருக்கை!

Related News

சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் விஜய் ஆய்வு!

அன்பில் மகேஷ் கைது – திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : அன்பில் மகேஷ் கைது – முழு விவரம்!

அர்னாப் புயல் மிக தீவிர புயலாக மாறி விசாகப்பட்டினம் – ஏனாம் இடையே கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி மோசடி வழக்கு – அன்பில் மகேஷின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் தந்தை குறித்து சர்ச்சை கருத்து – மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜ்நாத்சிங் கண்டனம்!

சர்வதேச வர்த்தகத்தில் பிரிக்ஸ் நாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன – ஓம் பிர்லா

ஆப்ரேஷன் டிரைடென்ட் – சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு!

கனமழை எச்சரிக்கை : கேரள ஏல தோட்டங்களுக்கு சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைப்பு!

தண்ணீரில் மூழ்கிய குழித்துறை சப்பாத்து பாலம் : 7-வது நாளாக போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்!

கனமழை எதிரொலி : கொடைக்கானல் – பழனி பிரதான சாலையில் மண்சரிவு!

ஐரோப்பிய நாடுகளில் தீவிரமடைந்துள்ள போராட்டம்; தொடரும் பதற்றம்

கன்னடர்களை புறக்கணிப்பதா ?; ஐ.டி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies