அமெரிக்காவிடம் இந்தியா உறுதி : அசைவ பால் இறக்குமதி அனுமதிக்கு வாய்ப்பே இல்லை!
Aug 6, 2026, 08:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அமெரிக்காவிடம் இந்தியா உறுதி : அசைவ பால் இறக்குமதி அனுமதிக்கு வாய்ப்பே இல்லை!

Murugesan M by Murugesan M
Jul 17, 2025, 08:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவுடனான மினி வர்த்தக ஒப்பந்தம் தயாராகி வருகிறது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் அறிவித்துள்ள நிலையில், அமெரிக்க பால் இறக்குமதிக்குக்  கண்டிப்பாக அனுமதி இல்லை என்பதில் மத்திய அரசு உறுதியாக நிற்கிறது. அதனாலேயே, இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாவதில் கால தாமதம் ஆகிறது. ஏன் இந்தியா பால் இறக்குமதியில் பிடிவாதமாக உள்ளது ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

உலக அளவில் பால் உற்பத்தியில் இந்தியா தான் ஆதிக்கம் செலுத்துகிறது. பால் உற்பத்தியில் சர்வதேச அளவில் முதலிடத்தில் உள்ளது. உலகின் மொத்த பால் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 25 சதவீதத்துக்கும் அதிகமாகும்.  உலகிலேயே இந்தியாவில் தான்  30-கோடிக்கும் அதிகமான் பசுக்கள் உள்ளன. சுமார் 187 மில்லியன் டன்களுக்கும் அதிகமான பால் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. .

இந்தியாவின் பால்வளத் துறை மிகவும் நம்பிக்கைக்குரிய துறைகளில் ஒன்றாகும். இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றுவதுடன், சைவ உணவு முறையை நோக்கிச் செல்லும் இந்தியர்களின் புரதத் தேவைகளையும் பூர்த்தி செய்கிறது.

இந்தியாவில் பால்வளம் மிகப்பெரிய விவசாயப் பொருளாகும். இது தேசிய பொருளாதாரத்தில் 5 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. மேலும், 8 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு நேரடி வேலைவாய்ப்பை வழங்குகிறது. சுமார் 1.4 பில்லியனுக்கும் அதிகமான இந்திய மக்களுக்கு உணவளிக்கிறது.

இந்தியாவின் பால் உற்பத்தியில் பெரும்பாலானவை உள்நாட்டிலேயே நுகரப்படுகிறது. மிகக் குறைந்த அளவு பால் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவின் பால் சந்தை உலகின் மிகப்பெரிய சந்தையாகும். நீண்ட காலமாகவே 16.8 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய இந்தியப் பால் சந்தையில் நுழைய அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது. ஆண்டுக்கு 239 மில்லியன் மெட்ரிக் டன்களுக்கு மேல் பால் உற்பத்தி செய்யும் அமெரிக்கா, தனது  வெண்ணெய் உள்ளிட்ட பால் பொருட்களை இந்தியாவில் விற்க விரும்புகிறது.

தற்போது, முக்கிய பால் இறக்குமதிகளுக்கு 60 சதவீதம் வரை இந்தியா வரி விதிக்கிறது. மேலும், இந்திய வீடுகளுக்குள் நுழையும் பால், இறைச்சி, இரத்தம் போன்றவற்றை  ஒருபோதும் உண்ணாத பசுக்களிடமிருந்து வருகிறது என்பதற்கான உறுதி சான்றிதழைக் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை கட்டாயமாகியுள்ளது.

இந்த கட்டுப்பாட்டு விதிகள் குறித்து  உலக வர்த்தக அமைப்பிடம் அமெரிக்கா புகார் அளித்துள்ளது. ஏனெனில், அமெரிக்கப் பண்ணைகளில் பசுக்களுக்கு பொதுவாகக் கோழி எச்சங்கள், மீன் உணவு மற்றும்  விலங்குகளின் இறைச்சிகளே உணவாக அளிக்கப்படுகின்றன.

“அசைவ பால்”   கோடிக்கணக்கான இந்தியக் குடும்பங்களுக்கு, குறிப்பாகச் சைவ உணவு உண்பவர்களுக்குப் பிடிக்கவில்லை. பால் பொருட்களை ஊட்டச்சத்து மற்றும் சடங்கு என்று இந்தியர்களால் பார்க்கப்படுகிறது.  இந்தியாவில் வழிபாட்டின் போது தெய்வத்துக்கு அபிஷேகப் பொருளாகப் பால் பயன்படுத்தப்படுகிறது. இந்து மத யாக வேள்விகளில் நெய் ஊற்றப்படுகிறது. பன்றிக் கொழுப்பு அல்லது கோழி எச்சங்களைப் பசுக்களுக்கு உணவாகக் கொடுக்கும் வழக்கம், உணவு எல்லைகளையும் மத பண்பாட்டு நம்பிக்கைகளின் வரம்புகளை மீறுகிறது.

அமெரிக்கக் கால்நடை தீவனத்தில் பன்றிகள், குதிரைகள் மற்றும் கோழிகளின் எச்சங்கள், இறைச்சிகள் பசுக்களுக்கு உணவாக சட்டப்பூர்வமாகச் சேர்க்கப்படுகிறது என்பதை  சியாட்டில் டைம்ஸ் விசாரணை அறிக்கை ஆவணப்படுத்தியுள்ளது. உலக வர்த்தக அமைப்பில் “அறிவியல் ரீதியான தடையல்ல” என்று அமெரிக்கா வாதிட்டாலும், இந்தியாவைப் பொறுத்தவரை, இது அறிவியலைப் பற்றியது அல்ல, மாறாக நம்பிக்கையைப் பற்றியதாகும்.

இப்போது நடைபெற்றுவரும் வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளில், அமெரிக்கா தங்கள் நாட்டு வேளாண் பொருட்கள்,பால் பொருட்கள் மற்றும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கு இந்தியச் சந்தையில் அனுமதி தரவேண்டும் என அழுத்தம் கொடுக்கப்படுகிறது. ஆனால், இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

அமெரிக்கப் பால் பொருட்களுக்கு இந்தியச் சந்தை திறக்கப்பட்டால், நாட்டின் கால்நடை விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என்று sbi வங்கியின் ஆய்வறிக்கை கூறுகிறது. அதாவது, இந்தியாவின் பால் விலை 16 சதவீதம் வீழ்ச்சியடையும் என்றும்,அதனால்,கால்நடை விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பு ஏற்படும் என்றும் எச்சரிக்கப் பட்டுள்ளது.

ஏற்கெனவே, ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளில், நாட்டின் பால் துறையை விட்டுக் கொடுக்காமல் இந்தியா  பாதுகாத்துள்ளது. அமெரிக்காவுடனும் இந்தியா அதே நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை பால்-பொருளாதாரம் மட்டும் அல்ல. அதற்கும் மேல் தேசத்தின் பண்பாடு, வாழ்வியல், நம்பிக்கை மற்றும் புனிதமான பாரம்பரியம் ஆகும்.

Tags: america vs indiatoday news americaindia newsIndia assures US: No chance of allowing import of non-vegetarian milkஅமெரிக்காவிடம் இந்தியா உறுதிஅசைவ பால் இறக்குமதி
Share
Tweet
SendShare
Previous Post

“சீனாவை பார்த்து படிக்க வேண்டிய நேரம் இது” – ஸ்ரீதர் வேம்பு அதிரடி X பதிவு!

Next Post

சிரியாவை குறிவைத்த இஸ்ரேல் : மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்!

Related News

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies