முடிவுக்கு வருகிறது 60 ஆண்டு சகாப்தம் : விடைபெறுகிறது இந்தியாவின் போர்க்குதிரை!
Aug 6, 2026, 01:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

முடிவுக்கு வருகிறது 60 ஆண்டு சகாப்தம் : விடைபெறுகிறது இந்தியாவின் போர்க்குதிரை!

Murugesan M by Murugesan M
Jul 22, 2025, 08:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவின் போர்க்குதிரை என்று அழைக்கப்படும் மிக்-21 ரக போர் விமானங்கள் விமானப்படையில் இருந்து விரைவில் விடைபெற உள்ளன. 60 ஆண்டு சகாப்தம் முடிவுக்கு வரும் நிலையில், மிக்-21 ரக போர்விமானங்கள் பற்றி அலசலாம் விரிவாக..

இந்தியாவின் முதல் சூப்பர்சோனிக் பைட்டர்ஜெட் என்றால் அது மிக்-21 ரக போர்விமானங்கள் தான்…. 1960 மற்றும் 70 காலகட்டங்களில் இந்திய வான்படையை பலப்படுத்திய இவ்வகை போர் விமானங்கள் தற்போது ஓய்வை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன.

ரஷ்ய தயாரிப்பான மிக்-21 ரக போர் விமானங்கள் 1963ம் ஆண்டு இந்திய விமானப்படையில் கைகோர்த்தவை… முக்கிய ராணுவ நடவடிக்கைகளில் பக்க பலமாக இருந்த இவ்வகை விமானங்கள், அதன் செயல்பாடுகளால் இந்தியாவின் முதுகெலும்பாகவே வர்ணிக்கப்பட்டன..

சோவியத் ரஷ்யா- இந்தியா கூட்டு சேர்ந்து 1955ம் ஆண்டு முதல் மொத்தம் 11 ஆயிரத்து 496 மிக்-21 ரக போர் விமானங்களைத் தயாரித்தன. இதில், 840 விமானங்கள் இந்தியா தரப்பிலும்,  10 ஆயிரத்து 645 மிக்-1 விமானங்களைச் சோவியத் ரஷ்யா தரப்பிலும் கட்டமைக்கப்பட்டன. குறிப்பாக 600 மிக்-21 ரக போர் விமானங்களை இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்  நிறுவனம் கட்டமைத்திருந்தது.

நான்கு கண்டங்களில் சுமார் 60 நாடுகள் மிக்-21 விமானங்களை பயன்படுத்தி வந்த நிலையில், 1986ம் ஆண்டு கடைசியாக அதன் தயாரிப்பு நிறுத்தப்பட்டது. 1965 மற்றும் 1971ம் ஆண்டு நடந்த இந்தியா – பாகிஸ்தான் போர் முதல் 1999ம் ஆண்டு நடந்த கார்கில் போர் வரை மிக்-21 ரக போர் விமானங்கள் இந்திய வான் பாதுகாப்பின் அரணாகத் திகழ்ந்தவை.

2019-ஆம் ஆண்டு நடைபெற்ற பாலகோட் தாக்குதலின்போது பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்த மிக்-21  ரக போர் விமானம் பயன்படுத்தப்பட்டது. இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் பயன்படுத்திய இவ்வகை விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டது.

புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்டிருந்தாலும், அடிக்கடி விபத்தில் சிக்குவது தொடர்கதையான நிலையில், அவற்றைச் சேவையிலிருந்து அகற்ற முடிவெடுக்கப்பட்டது.  எனினும், Tejas Mk1A ரக போர் விமானங்களின் உற்பத்தி தாமதமானதால், அதன் பயன்பாடு சிறிது காலம் நீட்டிக்கப்பட்டிருந்தது.

கடைசியாக 2023ம் ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற விமானப் படை நாள் அணிவகுப்பில் மிக்-21 விமானங்கள் பங்கேற்றன.  மிக்-21 ரக போர் விமானங்களுக்குப் பதில் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் இலகுவகை போர் விமானமான தேஜஸ் மார்க்-1ஏ சேவையில் இணைக்கப்படவுள்ளது.

இதற்காகச் செப்டம்பர் 19 அன்று சண்டிகர் விமானப்படை தளத்தில் இந்த போர்க்குத்திரைக்குப் பிரமாண்டமான பிரியாவிடை விழா நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: ரஷ்ய தயாரிப்பான மிக்-21 ரக போர் விமானங்கள்indian army news todayA 60-year era is coming to an end: India's warhorse bids farewellஇந்தியாவின் போர்க்குதிரைமிக்-21 ரக போர் விமானங்கள்
Share
Tweet
SendShare
Previous Post

பாகிஸ்தானின் அணுஆயுத கிடங்கை இந்தியா தாக்கியதா? – அம்பலப்படுத்திய கூகிள் எர்த் படங்கள்!

Next Post

வங்கதேச விபத்தால் அச்சம் : கேள்விக்குறியான சீனாவின் F-7 போர் விமான பாதுகாப்பு!

Related News

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies