நியூயார்க்கை கதறவிட்ட ஷேன் தமுரா யார்? - 5 பேரை சுட்டுக்கொன்ற கொடூரன் - பகீர் தகவல்!
Sep 20, 2026, 05:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

நியூயார்க்கை கதறவிட்ட ஷேன் தமுரா யார்? – 5 பேரை சுட்டுக்கொன்ற கொடூரன் – பகீர் தகவல்!

Murugesan M by Murugesan M
Jul 29, 2025, 07:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்காவின் நியூயார்க்கில் 44 மாடிகள் கொண்ட  அலுவலக கட்டடத்தில் நுழைந்து 5 பேரை சுட்டுக்கொன்ற கொடூரன் ஷேன் தமுரா பற்றிய பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கிச்சூடு பற்றி போலீசார் துப்பு துலக்கி வரும் நிலையில், ஷேன் தமுரா யார் என்பது பற்றி தற்போது பார்க்கலாம்.

நீல நிற கோட் சூட்டில் ஹாலிவுட் வில்லன் போன்ற தோற்றம்…. கையில் அதிநவீன AR-15 assault rifle…. என நியூயார்க்கைத் தெறிக்கவிட்ட இவர் பெயர்தான் ஷேன் தமுரா. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பரபரப்பான மிட் டவுன் மன்ஹட்டான் பகுதியில் உள்ள 345 பாரக் அவென்யூவில்தான் அந்த கொடூர சம்பவம் நடந்தது.  அயர்லாந்து தூதரகம், நேஷனல் ஃபுட்பால் லீக் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் இயங்கும் 44 மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டடத்தில் அதிரடியாக நுழைந்தார் ஷேன் தமுரா.

முதல் தளத்தில் வில்லன் போன்று நுழைந்த  ஷேன் தமுரா, அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைய, போலீஸ் அதிகாரி உள்பட 5 பேர் ரத்தவெள்ளத்தில் பிணமாயினர். முதல் தளத்தில் துப்பாக்கிச்சூடு நடந்ததை  உணர்ந்த சில பணியாளர்கள் தங்கள் அலுவலகத்தின் கதவுகளை மூடி, ஷோபாக்களையும், பர்னிச்சர்களையும் கொண்டு தற்காப்பு சுவரை அமைத்துப் பதுங்கிக் கொண்டனர்.

இதனிடையே துப்பாக்கிச்சூடு சம்பவம் காட்டுத்தீயாய் பரவ, நியூயார்க் நகரம் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டது. துப்பாக்கிகளுடன் நுழைந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஒவ்வொரு தளமாகச் சல்லடை போட்டுத் தேடிய போலீசார், 33வது தளத்தில் ஷேன் தமுராவை சடலமாக மீட்டனர். அவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் தற்கொலை செய்து கொண்டார் என்பது போலீசாரின் ரிப்போர்ட்.

துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்துத் துப்பு துலக்கிய காவல்துறைக்குப் பல திடுக்கிடும் தகவல் கிடைத்தது. 27 வயதுடைய ஷேன் தமுரா, ஹவாய் பகுதியில் பிறந்து வேகாஸ் பகுதிக்குக் குடிபெயர்ந்தவர் என்பது தெரியவந்தது. தனியார் நிறுவனத்தில் துப்பறிவாளனாக பணியாற்றிய ஷேன் தமுரா, ஆயுதங்களை மறைத்து எடுத்துச் செல்ல அனுமதி பெற்றிருந்தது விசாரணையில் தெரியவந்தது.

தாக்குதல் நடந்த அன்று குண்டு துளைக்காத ஆடையை ஷேன் தமுரா அணிந்திருந்தாக கூறிய போலீசார், அவர் தீவிர மனநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளனர். ஷேன் தமுரா வை “Pure evil”என்ற வார்த்தையால் சாடியுள்ள காவல்துறை, நியூயார்க்கின் இதய பகுதியில் நுழைந்து, அப்பாவி மக்களையும்,  காப்பாற்றத் துடித்த போலீஸையும் சுட்டுக்கொன்றதாகக் கூறியுள்ளது.

Tags: Who is Shane Tamurathe man who terrorized New York? - The brutal man who shot and killed 5 people - Breaking newsஅமெரிக்காவின் நியூயார்க்
Share
Tweet
SendShare
Previous Post

காடுகளின் காவலன் – சர்வதேச புலிகள் தினம்!

Next Post

குழந்தையில்லா தம்பதியை குறிவைக்கும் கும்பல் : IVF முறையில் பகீர் மோசடி – பரபரப்பு பின்னணி!

Related News

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

ஈரான் போரால் பெரும் இழப்பு : முதன்முறையாக உண்மையை ஒப்புக்கொண்ட பென்டகன் – சிறப்பு தொகுப்பு!

ஆட்டம் காட்டும் அமெரிக்கா : 100 % வரி மிரட்டல் : இந்தியாவுக்கு பாதிப்பா? – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவில் ஹாஸ்பிடாலிட்டி துறையின் அடுத்தகட்ட வளர்ச்சி : பாரதி மெராகியின் Tier 2, Tier 3 நகரப் பணிகள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies