மிரட்சியில் இந்தியாவின் எதிரிகள் : கடற்படைக்கு வலுசேர்க்கும் Project-18 போர் கப்பல்!
Sep 13, 2026, 02:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மிரட்சியில் இந்தியாவின் எதிரிகள் : கடற்படைக்கு வலுசேர்க்கும் Project-18 போர் கப்பல்!

Murugesan M by Murugesan M
Aug 3, 2025, 07:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கடற்படைக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் Project-18 என்ற பிரமாண்ட போர் கப்பலை இந்தியா தயாரித்து வருகிறது. அந்த போர் கப்பலின் சிறப்பம்சங்கள் குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு அதிநவீன ஆயுதங்களை வாங்கவும், தயாரிக்கவும், செயற்கை நுண்ணறிவைச் சிறப்பான முறையில் பயன்படுத்தவும் இந்திய ராணுவம் தீவிர முனைப்பு காட்டி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, கடற்படையை மேலும் பலப்படுத்தும் வகையில்,  ப்ராஜெக்ட்-18 என்ற பெயரில், NGD எனப்படும் NEXT  LEVEL  DESTROYERS வகையை சேர்ந்த போர் கப்பல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

உலகளவில் ஆயுதம் தாங்கிய போர் கப்பல்களில், இந்த வகை கப்பல்கள் முதன்மை இடம் வகிக்கின்றன. அண்மையில் “கப்பல் கட்டுமானத்தின் மூலம் தேசத்தைக் கட்டமைத்தல்” என்ற தலைப்பில் டெல்லியில் கருத்தரங்கு நடைபெற்றது. அப்போது, இந்த கப்பல் குறித்த சிறப்பம்சங்கள் எடுத்துரைக்கப்பட்டன.

இந்தியக் கடற்படையில் தற்போதுள்ள போர் கப்பல்களை காட்டிலும், ப்ராஜெக்ட்-18 கப்பல் அதிநவீனமானது என்பதால், இது சர்வதேச தரத்தின்படி க்ரூஸர் பிரிவை சேர்ந்த கப்பலாக கருதப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிநவீன சென்சார் அமைப்பைக் கொண்டுள்ள இக்கப்பலில்,  நீண்டதூர இலக்குகளைத் தாக்கும் வகையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ரேடார்கள் இடம்பெற்றுள்ளன. இத்தகைய ரேடார்கள் LRMFR என அழைக்கப்படுகின்றன.

360 டிகிரியையும் நுட்பமாகக் கண்காணிக்கும் வகையிலும், 500 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தில் உள்ள இலக்குகளையும் துல்லியமாகக் குறி வைக்கும் வகையிலும் இந்த கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இக்கப்பல் எதிரிகளின் தாக்குதலில் இருந்து தன்னை தானே தற்காத்துக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையிலான ஏவுகணைகளையும், ஆயுதங்களையும் இக்கப்பலால் சுமந்து செல்ல முடியும் என்பது இதன் சிறப்பம்சமாக கருதப்படுகிறது.

குறிப்பாக இவை ஒரே நேரத்தில் 144  ஏவுகணை கலங்களை கொண்டுள்ளன. மேலும், பிரம்மோஸ்-2 போன்ற எதிர்கால ஹைப்பர்சோனிக் ஆயுதங்களை எடுத்துச் செல்லும் வகையில் கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறைந்தது 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளையும் இந்த கப்பலில் இருந்தபடி தாக்கி அழிக்க முடியும் எனவும், பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் வான்வழி தாக்குதலில் இருந்து எளிதாகத் தற்காத்துக் கொள்ளும் வகையில் கவச அமைப்பை இது கொண்டுள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2  ஹெலிகாப்டர்களைக் கையாளும் வசதி கொண்டுள்ள இக்கப்பலால், நீருக்கடியில் ட்ரோன்களை ஏவவும், நீருக்குடியிலான தாக்குதல்களை எதிர்கொள்ளவும் முடியும். மத்திய அரசின் ஆத்மநிர்பர் பாரத்’ திட்டத்தின்கீழ், இந்த கப்பலின் 75 சதவீத கட்டுமான பணிகள் உள்நாட்டிலேயே நடைபெறுகின்றன.

இத்தகைய அதி சக்தி வாய்ந்த போர்க்கப்பல்கள், ஏவுகணைகள், ஹெலிகாப்டர்கள், ரேடார்களின் வருகையில் வல்லரசு நாடுகளுக்கு இணையான ராணுவ வலிமையைப் பெற்று வருகிறது இந்திய ராணுவம்.

Tags: Project-18 என்ற பிரமாண்ட போர் கப்பல்கடற்படைIndia's enemies in the Mirage: Project-18 warship to strengthen the Navyஇந்தியாவின் எதிரிகள்Project-18 போர்க்கப்பல்
Share
Tweet
SendShare
Previous Post

ரசிகர்களை அழ வைத்து சென்ற நகைச்சுவை நடிகர் மதன் பாப் : சிறப்பு கட்டுரை!

Next Post

குரங்கணி அருகே சீமான் போராட்டம் – சுற்றுலா பயணிகள் அவதி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies