ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!
Sep 10, 2026, 03:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

Murugesan M by Murugesan M
Aug 4, 2025, 01:57 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சீனா உடனான மோதல் விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி எழுப்பிய சந்தேகங்களுக்கு உச்சநீதிமன்றம் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது..

இந்தியா – சீனா இடையிலான கள்வான் பள்ளத்தாக்கு மோதல் குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேள்விகளை எழுப்பியிருந்தார்.

இதனைத்தொடர்ந்து, இந்திய ராணுவத்தை அவதூறாகப் பேசியதாக லக்னோ நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்குத் தடைவிதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி திபான்கர் தத்தா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ராகுல் காந்தி தரப்பில், இந்தியா எல்லைக்குள்ளான ஆக்கிரமிப்பு குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பேசக்கூடாது என்று எப்படி கூற முடியும் என வாதம் முன் வைக்கப்பட்டது.

இதற்குப் பதிலளித்த நீதிபதிகள், ராகுல் காந்தி தனது கருத்தை நாடாளுமன்றத்தில் பதிவு செய்திருக்கலாம். மாறாக சமூக வலைத்தளங்களில் பதிவிடுகிறீர்களே?.. இப்படிச் செய்யலாமா? எனவும் வினவினர்.

நாட்டின் மீது உண்மையான பற்று இருந்தால் இப்படி கேள்வி எழுப்ப மாட்டீர்கள் என்றும்,  உண்மையான இந்தியராக இருந்தால் இப்படிப் பேச மாட்டீர்கள் எனவும் சாடினர்.

ஆதாரம் இல்லாமல் எதுவும் பேசாதீர்கள் என அறிவுறுத்திய நீதிபதிகள், 2 ஆயிரம் கிலோ மீட்டர் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக எந்த ஆதாரத்தில் சொல்கிறீர்கள் எனவும் கேள்வி எழுப்பினர்.

ஒரு உண்மையான இந்தியர், எல்லை தொடர்பான விவகாரத்தை எடுத்தோம் கவிழ்த்தோம் எனப் பேசமாட்டார் எனக்கூறிய நீதிபதிகள், கருத்துச் சுதந்திரம் என்பதற்காக எல்லாவற்றையும் தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் பேச முடியாது எனவும் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக கீழமை நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள், எதிர் மனுதாரர்கள் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்.

Tags: Congressஉச்சநீதிமன்றம்ராகுல் காந்திராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்Supreme Court strongly condemns Rahul Gandhi
Share
Tweet
SendShare
Previous Post

ஸ்பைடர் மேன் 4 ஆம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு!

Next Post

தஞ்சையில் மேயரை கண்டித்து திமுக உறுப்பினர்கள் வாக்குவாதம்!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies