பட்டா வழங்க மறுக்கும் அரசு நிர்வாகம் : உதயநிதி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!
Sep 12, 2026, 06:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பட்டா வழங்க மறுக்கும் அரசு நிர்வாகம் : உதயநிதி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!

Murugesan M by Murugesan M
Aug 5, 2025, 08:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பட்டா வழங்கக்கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அலுவலகத்தைப் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். துணை முதலமைச்சரின் தொகுதியில்  நூறு ஆண்டுகளுக்கும் மேலாகத் தலைமுறை, தலைமுறையாக வசித்துவரும் இன்னல்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சிவராஜபுரம், மாரிமுத்து கெனால் தெரு, மாடகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் தலைமுறை, தலைமுறையாக வசித்து வருகின்றன.

பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் வசித்து வந்தால் அவர்களுக்குப் பட்டா வழங்க வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்திருக்கும் நிலையில், நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வசித்துவரும் தங்களுக்குப் பட்டா வழங்க மறுப்பதாகக் கூறி அப்பகுதி மக்கள் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திலிருந்து வந்திருப்பதாகக் கூறி ஒரு சிலர் சிவராஜபுரம் பகுதி மக்களின் புகைப்படத்தை எடுத்ததோடு அவர்களின் விவரங்களையும் பதிவு செய்து சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய நிலையில், அவர்களின் மனுக்களைக் கூடப் பெறவில்லை என்பது அப்பகுதி மக்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொருமுறை தொகுதிக்குள் வரும் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்த போதிலும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் தலைநகரில், துணை முதலமைச்சரின் சொந்த தொகுதியின் சட்டமன்ற அலுவலகத்தைப் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Government administration refuses to issue lease: People besiege Udhayanidhi officeஉதயநிதி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்
Share
Tweet
SendShare
Previous Post

திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த முதலீடு எவ்வளவு?  : எல். முருகன் கேள்வி!

Next Post

எதிர்கால போருக்கு தயார் : புதிய படை அணிகளை உருவாக்கிய இந்திய ராணுவம்!

Related News

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

Load More

அண்மைச் செய்திகள்

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies