அமெரிக்காவின் வரிவிதிப்பு அமல் : எந்தெந்த துறைகளுக்கு பாதிப்பு?
Sep 12, 2026, 10:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அமெரிக்காவின் வரிவிதிப்பு அமல் : எந்தெந்த துறைகளுக்கு பாதிப்பு?

Murugesan M by Murugesan M
Aug 27, 2025, 08:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள வரி விதிப்பு அமலுக்கு வந்துள்ளது. இதனால், எந்தெந்த துறைகள் அதிகப் பாதிப்பையும், எந்தெந்த துறைகள் குறைந்த பாதிப்பையும் சந்திக்கும் என்பது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

இந்தியாவின் நம்பர் ஒன் வர்த்தகக் கூட்டாளியாக அமெரிக்கா இருந்து வருகிறது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் பெரும்பாலானவை அமெரிக்காவுக்குதான் செல்கின்றன. இந்நிலையில், 50 சதவீத வரிவிதிப்பு இந்தியாவைச் சேர்ந்த சில துறைகளை அதிகம் பாதிக்கும் எனக் கூறப்படுகிறது.

ரத்தினங்கள், நகைகள் உள்ளிட்டவை இந்தியாவில் இருந்து அதிக அளவில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நகைகள் ஏற்றுமதி துறையில் 30 சதவீத ஏற்றுமதி இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது. கடந்தாண்டு மட்டும் 10 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான நகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது இந்திய மதிப்பில் 87 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.

அதேபோல், கடந்தாண்டு 22 ஆயிரத்து 800 கோடி ரூபாய்க்குக் கடல் உணவுகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. எனவே, இது சார்ந்த துறைகளும் கணிசமான பாதிப்பைச் சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் பட்டியலில் ஜவுளிப்பொருட்கள் முக்கிய இடம் வகிக்கின்றன.

கடந்தாண்டு 2 பில்லியன் டாலர் அளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் ஒரு பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. அதேபோல, கடந்தாண்டு ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள் 58 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதியாகியுள்ளன.

இப்படிப் பல தொழில்துறைகள் அமெரிக்காவின் வரிவிதிப்பால் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்த நிறுவனங்களுக்கு உதவ மத்திய அரசு அனைத்துவித நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இந்தியாவிடம் இருந்து பொருட்களை வாங்கிக்கொள்ளத் தயார் என ரஷ்யாவும் அறிவித்துள்ளது.

இதனிடையே,ஸ்மார்ட்போன், மின்னணு சாதனங்கள், மருந்துப்பொருட்கள் சார்ந்த துறைகள் அமெரிக்காவின் வரிவிதிப்பால் குறைந்த அளவிலான பாதிப்பையே சந்திக்கும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேபோல, சூரிய மின்கலம், காற்றாலைகள் போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சார்ந்த நிறுவனங்களுக்கும் அதிகப் பாதிப்பு இருக்காது எனக் கூறப்படுகிறது.

Tags: இந்தியாவுக்கு 50 % வரிவிதிப்புUS tax reform: Which sectors will be affected?.IndiaamericausaDonald Trump
Share
Tweet
SendShare
Previous Post

அமெரிக்காவிடம் ஜெட் இன்ஜின் வாங்கும் இந்தியா : ஒரு பில்லியன் டாலர் ஒப்பந்தம்!

Next Post

மாயாஜால சுழலின் மாமன்னன்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies