இந்தியாவுடன் இணையுமா பாகிஸ்தானின் சிந்து பகுதி? - ராஜ்நாத்சிங் கருத்தால் திருப்பம்!
Sep 13, 2026, 09:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியாவுடன் இணையுமா பாகிஸ்தானின் சிந்து பகுதி? – ராஜ்நாத்சிங் கருத்தால் திருப்பம்!

Murugesan M by Murugesan M
Nov 25, 2025, 04:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாகிஸ்தானின் சிந்து மாகாணம் மீண்டும் இந்தியாவுடன் இணையலாம் என்று மத்திய பாதுகாப்புத் அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருப்பது புவிசார் அரசியலில் புதிய மாற்றத்திற்கு வித்திட்டுள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

டெல்லியில் நடந்த சிந்து சமாஜ் மாநாட்டில் பங்கேற்ற மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தானின் சிந்து மாகாணம் மீண்டும் இந்தியாவுடன் இணையலாம் என்று தெரிவித்துள்ளார். பிரிவினையின் போது இந்தியாவின் சிந்து பகுதியில் உள்ள நிலப்பரப்பு பாகிஸ்தானுக்கு வலுக்கட்டாயமாகக் கொடுக்கப் பட்டது. ஒவ்வொரு இந்துவும் புனிதமாகக் கருதும் சிந்து நதி பாயும் சிந்து மாகாணம் சிந்து சமவெளி நாகரீகம் தோன்றிய இடமாகும்.

சிந்து சமூகத்தினரின் பூர்வீக நிலமான சிந்து மாகாணத்தில் பரம்பரையாக வாழ்ந்து வந்த பெரும்பான்மையான இந்துக்கள் பிரிவினையின் போது பலர் தப்பித்து இந்தியாவுக்கு வந்தனர். இந்தியாவில் இருந்து சிந்து நிலப்பகுதி பிரிக்கப்பட்டதை அங்குள்ள இந்துக்கள் ஏற்றுக்கொள்ளவில்லையென முன்னாள் துணை பிரதமரும் பாஜகவின் மூத்த தலைவருமான எல்கே அத்வானி தனது சுய சரிதையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சிந்துமாகாணத்தில் வாழ்ந்த இஸ்லாமியர்களும் சிந்து நதி நீரைப் புனிதமாகக் கருதியதாகவும் அவர் பதிவு செய்துள்ளார். வேறு வழியில்லாமல் அங்கேயே வாழ்ந்துவரும் இந்துக்களில் பலர் கொல்லப்பட்டனர். இஸ்லாமிய நாடான பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள இந்துக்கள் அந்நாட்டு அரசால் கட்டாய மதமாற்றம் உள்ளிட்ட பல கொடுமைகளை இன்றும் சந்தித்து வருகின்றனர். இப்படி இந்தியாவின் அண்டை நாடுகளில் சிறுபான்மையான இந்துக்கள் படும் துன்பங்களைத் துடைக்கும் வகையில் தான் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு குடியரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.

எல்லைகள் நிரந்தரமானவை அல்ல என்று கூறிய ராஜ்நாத் சிங், இப்போது இந்தியாவின் ஒரு பகுதியாக இல்லாமல் இருக்கும் சிந்து மாகாணம், நாகரீக ரீதியில் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருந்துள்ளது என்றும், ஒருவேளை நாளை சிந்து இந்தியாவுக்குத் திரும்பக் கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி மொராக்கோ சென்றிருந்த ராஜ்நாத் சிங் அங்குள்ள இந்திய வம்சாவளியினரிடம் பேசும் போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்களே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பை எதிர்த்து வருவதாகவும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை எந்த வித தீவிர ராணுவ நடவடிக்கை இல்லாமலேயே இந்தியா திரும்பப் பெற முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

சிந்து விரைவில் இந்தியாவுக்குத் திரும்பக்கூடும் என்ற மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ள கருத்தை வரவேற்றுள்ள பிரபல சிந்து தலைவரும் ஜெய் சிந்து முத்தஹிதா மஹாஸ் அமைப்பின் தலைவருமான ஷாஃபி பர்பத், ராஜ்நாத் சிங்கின் நிலைப்பாட்டை ஒப்புக் கொள்வதாகவும், சிந்துதேசத்தின் நீண்டகால சுதந்திர விருப்பத்துக்கும் இந்தியாவுடனான வரலாற்று உறவுக்கும் ஒரு தார்மீக மற்றும் அரசியல் ஊக்கமாக இருப்பதாகவும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், சிந்து தேசத்துக்கும் இந்தியாவுக்கும் இடையேயான “பரஸ்பர மரியாதை, இறையாண்மை மற்றும் வரலாற்று, கலாச்சார மற்றும் நாகரிக உறவுகளின் அடிப்படையில், இந்தியாவுடனான ஒரு கூட்டாட்சி உறவுக்குச் சிந்துதேசம் எப்போதும் தயாராகவே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags: Will Pakistan's Sindh region join India? - Rajnath Singh's opinion changesராஜ்நாத்சிங்மத்திய பாதுகாப்புத் அமைச்சர் ராஜ்நாத் சிங்
Share
Tweet
SendShare
Previous Post

ஐரோப்பாவை குறிவைத்து தாக்குதல் திட்டம் : ‘ஸ்கெட்ச்’ போட்ட ஹமாஸ் – மோப்பம் பிடித்த மொசாட்!

Next Post

வசூல் வேட்டையில் காந்தா திரைப்படம்!

Related News

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies