அதிகார பசியில் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் : யாருக்கு அல்வா கொடுக்கப் போகிறது காங்கிரஸ்?
Oct 13, 2026, 08:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அதிகார பசியில் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் : யாருக்கு அல்வா கொடுக்கப் போகிறது காங்கிரஸ்?

Murugesan M by Murugesan M
Nov 27, 2025, 01:03 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் இடையே வெடித்த அதிகார மோதலால், காங்கிரஸ் கட்சி தலையை பிய்த்துக் கொண்டு முழிக்கிறது. முதல்வர் பதவியைச் சித்தராமையா தக்க வைப்பாரா ? அல்லது டி.கே.சிவக்குமாரிடம் பறிகொடுப்பாரா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்..

காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் சொற்ப மாநிலங்களில் ஒன்றான கர்நாடகாவில், முதலமைச்சர் சித்தராமையா – துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் இடையே வெடித்திருக்கும் அதிகார மோதல், ஆட்சி கட்டிலுக்கு வேட்டு வைத்து விடுமோ ? என்ற அச்சத்தை சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு ஏற்படுத்தியிருக்கிறது. கர்நாடகா மாநிலத்தில் 2023-ம் ஆண்டில் ஆட்சியை பிடித்த காங்கிரஸ், முதலமைச்சராக யாரை நியமிப்பது என அப்போதே தட்டு தடுமாறியது.

சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு அயராது உழைத்த கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமாரையா? அல்லது மூத்த தலைவரும், பல முறை முதல்வராக பதவி வகித்தவருமான சித்தராமையாவையா? என்ற குழப்பம் நீடித்தது. இறுதியில், சித்தராமையா முதல்வராகப் பொறுப்பேற்ற நிலையில், காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. விழாவில் சித்தராமையா பதவிப்பிரமாணம் வாசித்தபோது கூட வராத சத்தம், டி.கே. சிவக்குமார் துணை முதல்வராகப் பொறுப்பேற்றபோது அரங்கமே அதிர்ந்தது.

முதலமைச்சர் தேர்வில் தவறான முடிவை எடுத்துவிட்டோமோ என்று காங்கிரஸ் தலைமை நினைக்கும் அளவுக்கு அந்தச் சம்பவம் அரங்கேறியது. எனினும் அரசியல் சாணக்கியத்தால் ஆட்சி அமைத்து விட்டோம் என நினைத்திருந்த காங்கிரஸ் தலைமைக்கு, டி.கே.சிவக்குமாரின் அரசியல் நகர்வு குடைச்சலை கொடுத்திருக்கிறது. கடந்த 20-ம் தேதியுடன் இரண்டரை ஆண்டுகள் ஆட்சிக் காலம் நிறைவடைந்திருக்கும் நிலையில், முதல்வர் பதவி டி.கே.சிவக்குமாருக்கு வழங்கப்பட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இதனை உறுதிப்படுத்தும் விதமாகத் தனது சொந்த தொகுதியான கனக்பூராவில் பேட்டியளித்த துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், முதல்வர் பதவி தொடர்பாக மறைமுக பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும், கட்சியை பலவீனப்படுத்திவிடும் என்பதால், மேற்கூட்டி எதுவும் பேச விரும்பவில்லை என்றும் தெரிவித்தார். ஆனால், சித்தராமையாவோ முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க மனமில்லாமல் அடம்பிடிப்பதாகவே தெரிகிறது.

முதல்வர் பொறுப்பில் மாற்றம் இருக்குமா என்ற சந்தேகத்திற்கு விளக்கம் பெறவே, டி.கே.சிவக்குமார் தரப்பு விரும்புவதாகவும், ராகுல் காந்தி குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்கும் டி.கே சிவக்குமார் உள்ளடி வேலைகள் செய்ய வாய்ப்பே இல்லை என்றும் சித்தராமையா ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். இப்படி இருதரப்புமே தங்கள் தலைவருக்கே முதல்வர் பதவி வேண்டும் எனப் போர்க்கொடி தூக்கியிருக்க, கடந்த ஒரு வாரக் காலமாக என்ன செய்வதன்று தெரியாமல் காங்கிரஸ் தலைமை விழி பிதுங்கி நிற்கிறது. கர்நாடகா அரசியல் பிரச்னைக்குக் காங்கிரஸ் மூத்த தலைவர்களான சோனியா காந்தியுடனும், ராகுல் காந்தியுடனும் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனக் கட்சியின் தலைவர் கார்கே கூறியிருக்கிறார்.

முதல்வர் பதவி மீதான ஆசையை டி.கே.சிவக்குமார் நேரடியாக வெளிப்படுத்தாவிட்டாலும், அடுத்து என்ன நடக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பீகார் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் காங்கிரஸுக்கு, டி.கே.சிவக்குமார் – சித்தராமையா இடையேயான மோதல் கட்சியை இன்னும் பலவீனப்படுத்தும் என்றே அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags: Power-hungry SiddaramaiahD.K. Shivakumar: Who is Congress going to give halwa to?கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையாதுணை முதல்வர் டி.கே. சிவக்குமார்காங்கிரஸ் ஆட்சி
Share
Tweet
SendShare
Previous Post

சாத்தனூர் அணையிலிருந்து கூடுதலாக உபரிநீர் வெளியேற்றம் : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

Next Post

பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைக்குள் மது தயாரிக்கும் கைதிகள் – அதிர்ச்சி தகவல்!

Related News

பாகிஸ்தான் மாகாணங்களை பிரிக்க அசிம் முனீர் முயற்சி? : அதிகாரத்தை கைப்பற்றும் திட்டம் என சந்தேகம் – சிறப்பு தொகுப்பு!

எஃப்-35 ரக போர் விமானத்தின் அருகில் கூட அமெரிக்க படையினர் அனுமதிப்பதில்லை – விமானப்படைத் தலைமைத் தளபதி ஏ.பி.சிங்

Make in India மீது மோகம் : சீனாவுக்கான இந்திய ஏற்றுமதி 39% அதிகரிப்பு – சிறப்பு தொகுப்பு!

இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தமிழ் மொழி, கலாச்சாரத்தை அனைவரும் பரப்ப வேண்டும் – பிரதமர் மோடி

அமெரிக்க ராணுவத்துக்காக உளவு; அம்பலமான எலான் மஸ்க்

ஷெபாஸ் ஷெரீப் அரசு Form 47அரசு; ஐநா சபையில் பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா

Load More

அண்மைச் செய்திகள்

இந்து முன்னணி பொறுப்பாளர்கள் 4 பேர் கைது; காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்

தமிழ்ச் சமூகத்தின் பெருமைபடுத்தும் பிரதமர்; பாஜக மையக்குழு பாராட்டு

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு; ராபர்ட் ஹால், மைக்கேல் வுட்ஃபோர்டுக்கு பகிர்ந்தளிப்பு

அன்பில் மகேசுக்கு எதிரான வழக்கு; மத்திய குற்றப்பிரிவு தீவிரம்

அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஆலோசனை; கட்சிக்குள் மீண்டும் சலசலப்பு

அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேரின் ராஜினாமா வழக்கு; உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு

ஆளுநரின் அதிகாரம் பற்றி திமுக எப்போது பேச ஆரம்பித்தது? உயர் நீதிமன்றம் கேள்வி!

பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயிலில், 5 மணிநேரத்தில் 25,000 பேர் பயணம்!

தலைமை செயலகத்திலும் மின்தடையா? அன்புமணி அதிர்ச்சி!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies