ஷெபாஸ் ஷெரீப் அரசு Form 47அரசு; ஐநா சபையில் பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா
Oct 11, 2026, 10:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஷெபாஸ் ஷெரீப் அரசு Form 47அரசு; ஐநா சபையில் பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா

Manikandan by Manikandan
Oct 11, 2026, 09:34 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஐநா சபையில் பாகிஸ்தானின் ஷெபாஸ் ஷெரீப் ஆட்சியை Form 47அரசு என்று இந்தியா கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. மேலும், பாகிஸ்தான் ஒரு காலத்தில் வளர்த்தெடுத்த பயங்கரவாதக் கட்டமைப்புகளே அந்நாட்டை அச்சுறுத்தும் நிலைக்கு வளர்ந்துள்ளன என்றும் இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

ஏற்கெனவே பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகளான மரியம், அண்டை நாடுகளை விட பாகிஸ்தானின் அண்டை மாகாணங்களிலிருந்தே தனது மாகாணம் பெரிய அச்சுறுத்தலை எதிர்கொள்வதாகக் கூறியிருந்தார்.

இந்நிலையில் அந்நாட்டின் இருண்ட ரகசியத்தைப் பாகிஸ்தானின் தலைவர்களே ஒப்புக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள ஐநாவுக்கான இந்திய தூதரக அதிகாரி ரகு பூரி, ஒரே நேரத்தில் முயலோடு ஓடிக்கொண்டும், வேட்டை நாய்களோடு வேட்டையாடிக்கொண்டும் இருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பயங்கரவாதம் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு உண்மையை உணர்த்தும் வகையில் பேசிய அவர் Form 47 அரசான பாகிஸ்தான் ஒரு மோசமான யதார்த்தத்தை எதிர்கொண்டு வருவதாகக் கூறியுள்ளார்.

ஒரு குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை Form 45 ஆகும். இதன் பிறகு தேர்தல் அதிகாரி தனது தொகுதியில் உள்ள அனைத்து Form 45-களின் முடிவுகளையும் ஒன்றாக இணைத்து Form 47யைத் தயாரிப்பார்.

2024-ல் பாகிஸ்தான் பொதுத் தேர்தலின் போது, தங்கள் கட்சிச் சின்னத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டதால் சுயேச்சைகளாகப் போட்டியிட்ட இம்ரான் கானின் PTI கட்சி வேட்பாளர்கள், வாக்குச்சாவடிகளில் பெறப்பட்ட Form 45 தரவுகளுக்கும், தேர்தல் அதிகாரிகளால் வெளியிடப்பட்ட Form 47 இறுதி முடிவுகளுக்கும் இடையே மிகப்பெரிய முரண்பாடுகள் இருந்ததாகக் குற்றம் சாட்டினார்கள்

Form 45 தரவுகளில் பல வாக்குச் சாவடிகளில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி வெற்றி பெற்றிருந்தது. ராணுவத்தின் தலையீட்டால் Form 47 யைத் திருத்தி ஷெபாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கூட்டணிக்குச் சாதகமாக தேர்தல் முடிவுகளை தேர்தல் அதிகாரிகள் அதிகாரப் பூர்வமாக அறிவித்தனர்.

PTI-ஆதரவு பெற்ற சுயேச்சைகள் 101 இடங்களைக் கைப்பற்றி மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்த நிலையிலும் ராணுவத்தின் ஆதரவைப் பெற்ற பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சி, கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைத்து ஷெபாஸ் ஷெரீப் பிரதமரானார்.

இதனால் ஷெரீப் அரசு உண்மையான மக்கள் ஆதரவோடு வரவில்லை என்றும், மாறாக திருத்தப்பட்ட Form 47 மூலமாக உருவான ஒரு போலி அரசு என்றும், Form 47 அரசு என்றும், எதிர்க்கட்சிகளும், பாகிஸ்தான் பொது மக்களும் கிண்டல் செய்து வருகின்றனர்.

குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான Form 47 கள் மாற்றியமைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்ததாக கடந்த ஆண்டு காமன்வெல்த் பார்வையாளர் குழு வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.

இதையே தான் ஐநா சபையில் உரையாற்றிய ரகு பூரி, பெட்டல் கெலாட் உள்ளிட்ட இந்திய தூதரக அதிகாரிகள், பாகிஸ்தானின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஷெபாஸ் ஷெரீப் அரசை சர்வதேச மேடையில் Form 47 அரசு என்று நேரடியாகக் குறிப்பிட்டு விமர்சித்துள்ளனர்.

இது பாகிஸ்தான் ஆட்சியின் மீதான வெறும் விமர்சனம் மட்டுமல்ல; மாறாக, 2024 தேர்தல்களின் நம்பகத்தன்மை குறித்த சர்ச்சையையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

Tags: IndiapakistanUnited Nationsthrash
Share
Tweet
SendShare
Previous Post

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை சம்பவம்; ஜெம் வீரமணி வீட்டில் சோதனை

Next Post

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபமேற்ற வலியுறுத்தல்; இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

Related News

அமெரிக்க ராணுவத்துக்காக உளவு; அம்பலமான எலான் மஸ்க்

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபமேற்ற வலியுறுத்தல்; இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை சம்பவம்; ஜெம் வீரமணி வீட்டில் சோதனை

பிரதமர் மோடியின் வருகையால் தொண்டர்கள் உற்சாகம்; நைனார் பாலாஜி

மதுரை மெட்ரோ திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்; முதலமைச்சர் கோரிக்கை

தமிழகத்தின் வளர்ச்சிக்காக முதலமைச்சர் விஜயுடன் இணைந்து செயல்படுவேன்; பிரதமர் மோடி உறுதி

Load More

அண்மைச் செய்திகள்

ஷெபாஸ் ஷெரீப் அரசு Form 47அரசு; ஐநா சபையில் பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா

தமிழகம் வந்த பிரதமர் மோடி; ரூ,13,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்’

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வலியுறுத்தல் – இந்து முன்னணி ஆர்பாட்டம்!

திருப்பூரில் செல்போன் வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த மாணவர் கொலை – சக மாணவர் நீதிமன்றத்தில் சரண்!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ சேவையை தொடங்கி வைத்த பிரதமர் – முதல்வருடன் இணைந்து ஒன்றாக பயணம்!

சென்னையில் ஓடும் பழைய பிஎஸ்-4 பேருந்துகளை பிற மாவட்டகளுக்கு மாற்ற திட்டம்!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னை வந்த பிரதமருக்கு உற்சாக வரவேற்பு ; ரூ.13,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!

ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம் : பிரதமர் மோடி வழங்கிய தீர்வு : 3 கட்டமாக செயல்படுத்த முன்மொழிவு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies