இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தமிழ் மொழி, கலாச்சாரத்தை அனைவரும் பரப்ப வேண்டுமென பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை ஜெய்கோபால் கரோடியா பள்ளியில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, திருக்குறளின் பெருமையை எடுத்துரைத்தார். இந்தியா வந்த ரஷ்ய அதிபர் புதினுக்கு ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் பரிசளித்ததையும் அவர் நினைவு கூர்ந்தார்.
திருவள்ளுவர் மாணவர்களுக்கு மிகவும் உகந்த கருத்துகளையும் அறிவுரைகளையும் விட்டுச் சென்றுள்ளார் என தெரிவித்தார்.
புதிது புதிதாக கற்றுக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் திருக்குறள் ஓர் அற்புதமான வழிகாட்டி என்றும், “நாம் எவ்வாறு சிறந்த முறையில் கற்க வேண்டும் என்பதை திருக்குறள் மூலம் திருவள்ளுவர் கற்பிக்கிறார் என்றும் அவர் கூறினார்.
இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தமிழ் மொழி, கலாச்சாரத்தை அனைவரும் பரப்ப வேண்டும் என்றும், தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், இலக்கியம், கவிதைகள், மரபுகளை எடுத்து செல்லுங்கள் என்றும் அவர் கூறினார்.
“பல்வேறு பின்னணிகளை சேர்ந்த நண்பர்களுடன் தமிழ் மொழியையும் சிறப்புகளையும் பகிர்ந்துகொள்ளுங்கள் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
















