பாரதத்திடம் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகளை இளைஞர்கள் பயன்படுத்தி மேம்பட வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சென்னை ஜெய்கோபால் கரோடியா பள்ளியின் 50-வது ஆண்டு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, அங்கு நிறுவப்பட்டுள்ள ஏஐ ஆய்வகத்தைத் திறந்துவைத்தார்,
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இன்றைய பாரதத்திடம் வாய்ப்புகள் கொட்டிக் கிடப்பதாக தெரிவித்தார். இளைஞர்கள் தங்களது எதிர்காலத்தை மேம்படுத்திக்கொள்ள இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
















