எல்லா போக்குவரத்தும் ஒரே இடத்தில் : அசர வைக்கும் அகமதாபாத் ரயில் நிலையம்!
Oct 29, 2026, 09:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

எல்லா போக்குவரத்தும் ஒரே இடத்தில் : அசர வைக்கும் அகமதாபாத் ரயில் நிலையம்!

Murugesan M by Murugesan M
Dec 1, 2025, 08:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாட்டிலேயே முதல் முறையாக 16 தளங்களுடன் கூடிய ரயில் நிலையம், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கட்டப்பட்டு வருகிறது. 2027-ம் ஆண்டில் பயன்பாட்டிற்கு வரும் இந்த ரயில் நிலையத்தில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறுகின்றன. விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.

எந்தவொரு மாநிலத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றாலும், குஜராத் மாடலை தவிர்த்து விட்டு வேறு எதையும் சிந்தித்து கூடப் பார்க்க முடியாது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை அகற்றி விட்டு, பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி மகுடம் சூடியதற்கு, இந்தக் குஜராத் மாடலே முதல் படி என்று கூறலாம். அந்த அளவுக்கு ஒட்டுமொத்த தேசத்திற்கும் முன்னுதாரணமாகத் திகழும் குஜராத் மாடலில், மேலும் ஒரு பிரமிக்க வைக்கும் கட்டமைப்பு, ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அது என்னவென்றால், அகமதாபாத்தில் 16 தளங்களுடன் கட்டப்பட்டு வரும் அதிநவீன ரயில் நிலையம் தான். மிகப்பெரிய ரயில் நிலையம் என்றாலே 12,13 பிளாட்பார்ம்கள் இருப்பதை கேள்விப்பட்டிருப்போம். அதென்ன 16 தளங்கள் என்பது வியப்பை கூட்டுகிறதல்லவா? … ஆம், அப்படியொரு சிறப்பம்சம் தான் அகமதாபாத் ரயில் நிலையத்தில் இடம்பெறுகிறது. எதற்காக இந்த ஏற்பாடு என்றால்? அகமதாபாத் ரயில் நிலையம், எக்ஸ்பிரஸ் ரயில்கள், புறநகர் பகுதிகளை மட்டும் கையாளப்போவதில்லை… மெட்ரோ ரயில்களையும், பேருந்துகளையும் இங்கிருந்து இயக்கக்கூடிய வகையில் கட்டடம் வடிவமைக்கப்படுகிறது.

இது மட்டுமல்ல… பிரம்மாண்ட பார்க்கிங் வசதி, அதிநவீன வசதியுடன் கூடிய காத்திருப்பு அறை, வணிக வளாகங்கள் எனப் பயணிகளுக்கு விருந்து காத்திருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாகக் கவனிக்கத் தக்க விஷயம் என்னவென்றால், புல்லட் ரயில் சேவைக்கும் இது உகந்ததாக வடிவமைக்கப்படுவதே. ஜப்பான் உதவியுடன் மும்பை – அகமதாபாத் இடையே 508 கிலோ மீட்டர் தொலைவிற்கு புல்லட் ரயில் வழித்தடம் அமைக்கப்படும் நிலையில், ரயில் பயணிகளுக்கு இப்போதே எதிர்பார்ப்பு கூடியுள்ளது. அகமதாபாத் ரயில் நிலையத்தின் வடிவமைப்பே அர்த்தமுள்ளதாகவும், ஆச்சரியமூட்டுவதாகவும் இருக்கிறது.

அகமதாபாத் பட்டத் திருவிழா, சர்வதேச அளவில் புகழ்பெற்றதாக இருக்கும் நிலையில், அதனைப் பிரதிபலிக்கும் வகையில் ரயில் நிலையத்தின் வெளிபுறத் தோற்றம் அமைக்கப்படுகிறது. கட்டடத்தின் மேற்புறம் ஏராளமான காத்தாடிகளை அடுக்கி வைத்தது போல் வடிவமைக்கப்படுவது, பயணிகளை நிச்சயம் அசர வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

2027-ம் ஆண்டில் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்படும் அகமதாபாத் ரயில் நிலையம், ரயில், மெட்ரோ, பேருந்து போக்குவரத்துகளை ஒரே இடத்தில் இணைப்பதால், பயணிகளின் அலைச்சல் குறையும். குஜராத் மாநிலத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்தின் பொருளாதாரத்திற்கும், 16 தளங்களுடன் கூடிய அகமதாபாத் ரயில் நிலையம் கைகொடுக்கும் என்பதால், எந்தத் தேதியில் திறப்பு விழா நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே கிளம்பியுள்ளது.

Tags: அசர வைக்கும் அகமதாபாத்All transportation in one place: The stunning Ahmedabad railway station
Share
Tweet
SendShare
Previous Post

“இனி யாரும் வேலைக்கு செல்வது கட்டாயமில்லை” – எலான் மஸ்க் நம்பிக்கை!

Next Post

ரோபோக்களை உற்பத்தி செய்து தள்ளும் சீனா : சீனாவின் ரோபோட்டிக்ஸ் புரட்சி ஆதாயமா? ஆபத்தா?

Related News

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies