AI சர்வதேச மாநாட்டில் காங்கிரசார் போராட்டம் - பாஜக கண்டனம்!
Sep 14, 2026, 03:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

AI சர்வதேச மாநாட்டில் காங்கிரசார் போராட்டம் – பாஜக கண்டனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 21, 2026, 06:18 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உலகத் தலைவர்களும், பல முன்னணி நிறுவனத் தலைவர்களும் பங்கேற்றுள்ள AI சர்வதேச மாநாட்டில் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய அரைநிர்வாணப் போராட்டம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த ஐந்து நாள் AI சர்வதேச மாநாடு, கடந்த 17ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இதில் பல உலக நாடுகளின் தலைவர்களும், தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளும் பங்கேற்று, இந்தியாவின் பெருமைகள் குறித்து பேசி நமது நாட்டை பெருமைப்படுத்தி வருகின்றனர்.

கடந்த மூன்று நாட்களாக சிறப்பாக நடந்து வந்த இந்த மாநாட்டில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர் வேண்டுமென்றே போராட்டத்தில் ஈடுபட்டு நாட்டை அவமதிக்கும் செயலில் ஈடுபட்டனர்.

மாநாடு நடைபெறும் AI மாநாட்டின் கண்காட்சி அரங்கத்திற்குள் புகுந்து மேலாடைகளை கழற்றி அரைநிர்வாணமாக நின்று முழக்கமிட்ட காங்கிரஸ் கட்சியினருடன் அங்கிருந்த மக்கள் சண்டை போட்டு விரட்டியடித்தனர். பின்னர் வெளியே சென்ற அவர்களை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

காங்கிரஸ் கட்சியின் இத்தகைய அநாகரிக செயல், நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு தரப்பினரும், பொதுமக்களும் கடும் கண்டனக் குரல்களை எழுப்பி வருகின்றனர். அதேபோல், காங்கிரசின் இந்த சதிக்கு மூளையாக செயல்பட்டது ராகுல்காந்திதான் என பாஜக விமர்சித்து வருகிறது.

அதேவேளையில், போராட்டத்தில் பங்கெடுத்த ஒருவர், ராகுல்காந்தியுடன் நிற்கும் புகைப்படம் வெளியாகி, அதனை உறுதி செய்யும் விதமாக அமைந்தது. எனவே, இது குறித்து விமர்சித்த பாஜக எம்பி சம்பித் பத்ரா, காங்கிரஸ் இந்த போராட்டத்தை திட்டமிட்டதே ராகுல்காந்தியின் வீட்டில்தான் என கூறியுள்ளார்.

அதேபோல், சிவராஜ் சிங் செளகான் இது தேசத்துரோகம் என்றும், பியூஷ் கோயல் இது ஆணவம் மற்றும் விரக்தியின் வெளிப்பாடு என்று தெரிவித்துள்ளனர். மேலும், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, ஏஐ மாநாடு ஒன்றும் அரசியல் மேடையல்ல என்று காங்கிரசுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

Tags: 2026 ai summit videoai summit india 2026ai impact summit 2026ai summit delhi 2026global ai summit 2026bill gates ai summit 2026Congress party2026 ai summit videosai summit 2026congress protest in ai summit2026 ai summitai summit 2026 newsindia ai summit 2026
Share
Tweet
SendShare
Previous Post

திமுக ஆட்சி மீண்டும் தொடர வாய்ப்பு – முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் நம்பிக்கை!

Next Post

டெல்லி ஏஐ மாநாட்டில் காங்கிரசாரின் போராட்டத்திற்கு எதிர்ப்பு – ராகுல் காந்தி இல்லத்தை முற்றுகையிட்ட பாஜகவினர்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies