ALL FAIL திமுக அரசு...REPORT CARD வெளியிட்ட பாஜக!
Sep 12, 2026, 01:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ALL FAIL திமுக அரசு…REPORT CARD வெளியிட்ட பாஜக!

Manikandan by Manikandan
Feb 22, 2026, 06:53 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேர்தலுக்கு முன்பாக திமுக வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை காற்றில் பறக்கவிடப்பட்டிருப்பதை ஆதாரத்துடன் விளக்கி தமிழக பாஜக வெளியிட்டிருக்கும் ரிப்போர்ட் கார்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. துறைவாரியாக திமுக அரசின் தோல்விகளை பட்டியலிட்டு காட்டும் தமிழக பாஜகவின் ரிப்போர்ட் கார்டு குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்.

2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுக வழங்கிய தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தன. அந்த வாக்குறுதிகளில் 75 சதவிகிதம் நிறைவேற்றிவிட்டோம், 80 சதவிகிதம் நிறைவேற்றிவிட்டோம் என அமைச்சர்கள் ஆளாளுக்கு ஒரு சதவிகித்தை கூறிவந்த நிலையில், அவர்களுக்கெல்லாம் தலைவரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலினோ கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றிவிட்டோம் என தெரிவித்திருக்கிறார். கல்வி மற்றும் விவசாயக் கடன் தொடங்கி நீட் தேர்வு வரை திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நம்பி ஏமாந்திருக்கும் மக்கள் மத்தியில் மு.க.ஸ்டாலினின் பேட்டி கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தேர்தலுக்கு முன்பாக திமுக கொடுத்த வாக்குறுதிகளும், அதன் தற்போதைய நிலை குறித்தும் தமிழக பாஜக விரிவான விளக்க அறிக்கையை தொகுத்து வெளியிட்டுள்ளது. திமுக ஆட்சியின் மதிப்பெண் அட்டை எனும் பெயரில் தமிழக பாஜக வெளியிட்டிருக்கும் அந்த ரிப்போர்ட் கார்டின் படி 31 சதவிகித வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றி திமுக அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்திருக்கிறது. ஆட்சி மற்றும் நிர்வாகம், உட்கட்டமைப்பு, உட்கட்டமைப்பு, சமூக நீதி, சுகாதாரம், சுற்றுச்சூழல், பெண்கள் மற்றும் பொதுமக்களின் என பெரும்பாலான துறைகளில் திமுக ஆட்சியின் நிர்வாகம் படுதோல்வியை சந்தித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு, விலைவாசி, பெண்கள் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, சட்டம் ஒழுங்கு, பொருளாதாரம், கல்வி மற்றும் சுகாதாரம், மத நல்லிணக்கம், சமூகநீதி, ஊழல் ஆகிய பத்து பிரிவுகளில் ஒன்பது பிரிவுகளில் தோல்வியடைந்திருக்கும் திமுக, ஊழல் என்ற ஒரு பிரிவில் மட்டும் வெற்றி பெற்றிருப்பதாகவும் பாஜக வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநில சுயாட்சி பெறுவதற்காக மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவு குறித்தும் பரிந்துரைகளை வழங்க ஒரு குழுவை அமைத்து அக் குழுவின் முதல் பாகத்தை அண்மையில் வெளியிட்ட திமுக அரசு, தன்னுடைய தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த முதல் வாக்குறுதியான மாநில உரிமைகளை அடகு வைத்திருப்பது தான் மிச்சம் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக பொய்யான, சாத்தியமில்லாத, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வாரி வழங்கி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக, தற்போது அடுத்து வரும் தேர்தலை கருத்தில் கொண்டு மீண்டும் ஒரு தேர்தல் வாக்குறுதியை தயாரித்து வரும் நிலையில், தமிழக பாஜக வெளியிட்டிருக்கும் இந்த ரிப்போர்ட் கார்டு பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. இதன் மூலம் சாதனைகள் எனும் பெயரில் பிரம்மாண்ட நிகழ்வுகளையும், விளம்பரங்களையும் வெளியிட்டு மக்களை மீண்டும் ஏமாற்றி ஆட்சிக்கு வந்துவிடலாம் என்ற திமுகவின் கனவு தகர்ந்திருப்பதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

Tags: dmk scamtnbjpkn nehru scamkn nehru scam NEWSbjpDMKElectiontn bjp
Share
Tweet
SendShare
Previous Post

காதலியை கரம்பிடித்த முன்னாள் இந்திய வீரர் ஷிகர் தவான்!

Next Post

சூப்பர் 8 சுற்றில் இந்தியாவை விழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies