பொய் பொய்யாக பேசும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - போட்டு தாக்கிய ஜனநாயக கட்சி ஆளுநர் - சிறப்பு தொகுப்பு
Sep 11, 2026, 10:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொய் பொய்யாக பேசும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – போட்டு தாக்கிய ஜனநாயக கட்சி ஆளுநர் – சிறப்பு தொகுப்பு

Manikandan by Manikandan
Feb 26, 2026, 09:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆட்சிக்கு வந்து ஓராண்டில் அமெரிக்கா முன்னேறியுள்ளதாக ட்ரம்ப் கூறிய கருத்துக்கு, வர்ஜீனியாவின் முதல் பெண் ஆளுநரான அபிகேல் ஸ்பான்பெர்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

பரஸ்பர வரி விதிக்கும் அதிகாரம் அதிபருக்கு இல்லை என்று கூறிய அமெரிக்க உச்சநீதிமன்றம் உலக நாடுகள் மீது ட்ரம்ப் விதித்த வரியை ரத்து செய்து உத்தரவிட்டது.

தீர்ப்பு வந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு மற்றொரு சட்டவிதிகளின்படி அனைத்து நாடுகள் மீதும் 10 சதவீத வரியை ட்ரம்ப் விதித்தார்.

உச்சநீதிமன்றத்தின் அபத்தமான தீர்ப்பை வைத்து எந்தவொரு நாடும் விளையாட நினைத்தால் எல்லா நாடுகள் மீதும் 15 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும் பகிரங்கமாக எச்சரித்திருந்தார்.

இந்நிலையில்,ஏற்கெனவே விதிக்கப்பட்ட வரிகளை வசூலிப்பதை கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நிறுத்தியுள்ள அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு துறை, அதற்குப் பதிலாக புதிய 10 சதவீத வரிகளை வசூலிக்கத் தொடங்கியுள்ளது.

இதற்கிடையில், தாங்கள் செலுத்திய வரிப்பணத்தை அரசு முழுமையாகத் திரும்பத் தர வேண்டுமென ஃபெட்எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.

தனது இரண்டாவது ஆட்சிக்காலத்தின் ஓராண்டு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், துரதிர்ஷ்டவசமான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகும் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளும் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்களைத் தொடர விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

அதிபரின் உரை நிகழ்வைப் புறக்கணித்த வர்ஜீனியாவின் முதல் பெண் ஆளுநரான 46 வயதான அபிகேல் ஸ்பான்பெர்கர், அதிபர் ட்ரம்ப் தனது உரையில் நேர்மையாக இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்க மக்களின் வாழ்வை எளிமையாக்க அதிபர் ட்ரம்ப் பாடுபடுகிறாரா ? உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அமெரிக்கர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க பாடுபடுகிறாரா ? உண்மையில் அமெரிக்கர்களுக்காக அதிபர் பாடுபடுகிறாரா? என்ற மூன்று கேள்விகளை அமெரிக்க வாக்காளர்களிடம் முன்வைத்த அபிகேல் ஸ்பான்பெர்கர், மூன்று கேள்விகளுக்கும் இல்லை என்ற ஒற்றை பதிலை தானே தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் பொய் சொல்வதாகவும், அமெரிக்கர்களைப் பலிகடா ஆக்குவதாகவும், நாட்டின் முக்கியமான சவால்களுக்கு எந்த உண்மையான தீர்வுகளையும் வழங்காமல் இருப்பதாகவும் கூறியுள்ள அபிகேல் ஸ்பான்பெர்கர், ட்ரம்ப் ஒரு மோசமான அமெரிக்காவை உருவாக்கி வருவதாக தெரிவித்துள்ளார்.

மத்திய புலனாய்வு அமைப்பின் முன்னாள் வழக்கு அதிகாரியான ஸ்பான்பெர்கரின் கருத்து, அரசியல் காற்று தங்களுக்கு சாதகமாக மாறுவதாக ஜனநாயகக் கட்சியினர் நம்புகின்றனர்.

காரணம் வர்ஜீனியாவில் ஸ்பான்பெர்கரின் வெற்றியைத் தொடர்ந்து, இந்த மாத தொடக்கத்தில் டெக்சாஸில் நடந்த சிறப்புத் தேர்தல் உட்பட, பிற உயர்மட்ட தேர்தல்களிலும் ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இது இடைக்கால தேர்தலில் அதிபர் ட்ரம்புக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Tags: Donald TrumpUnited StatesTrumpprogressfirst yearTrump'sVirginiaamericaAbigail SpanbergerpresidencyGovernorus
Share
Tweet
SendShare
Previous Post

உக்ரைனில் உருவாகி வரும் மக்கள் தொகை பேரழிவு – குறையும் குழந்தை பிறப்பு : கேள்விக்குறியான எதிர்காலம்! – சிறப்பு தொகுப்பு

Next Post

ட்ரம்ப்பை கொலை செய்ய முயற்சி? – எஸ்டேட்டில் அத்துமீறி நுழைந்த இளைஞர் சுட்டுக்கொலை..சிறப்பு தொகுப்பு

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies