காவலருக்கும் திமுக நிர்வாகிக்கும் இடையே கைகலப்பு – ராயப்பேட்டையில் பரபரப்பு!
Sep 12, 2026, 01:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காவலருக்கும் திமுக நிர்வாகிக்கும் இடையே கைகலப்பு – ராயப்பேட்டையில் பரபரப்பு!

Manikandan by Manikandan
Feb 28, 2026, 03:26 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை ராயப்பேட்டை பகுதியில் பணியில் இருந்த காவலருக்கு திமுக நிர்வாகி மிரட்டல் விடுத்ததோடு, அவரை தாக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை ராயப்பேட்டை பகுதியில் காவலருக்கும் திமுக மாவட்ட துணைச் செயலாளருக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராயப்பேட்டை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் அருண் சிங் என்பவர், அஜந்தா பேருந்து நிறுத்தம் அருகே இன்று வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது, திருட்டு வழக்கில் தொடர்புடைய ‘அப்பு’ என்ற நபரை அப்பகுதி பொதுமக்கள் பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தனர். பொதுமக்கள் அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, அப்புவை காவலர்கள் அருகிலுள்ள புறக்காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைத்தனர்.

இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த திமுக சென்னை மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.ந. துரை, திருட்டு வழக்கில் தொடர்புடைய அப்புவை புறக்காவல் நிலையத்திலிருந்து வெளியே இழுத்து வந்து தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைத் தடுக்க முயன்ற காவலர் அருண் சிங், மாவட்ட துணைச் செயலாளர் தள்ளிவிட்டதாகவும், இதன் காரணமாக இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து, இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அங்கு திரண்ட 40-க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை உயர் அதிகாரிகள், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில், கைது செய்யப்பட்ட அப்புவை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட குற்றவாளியை காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைத்திருந்த காவலர்களை திமுக நிர்வாகிகள் தாக்கியதாக கூறப்படும் இந்த சம்பவம், ராயப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: ChennaipoliceDMKRayapettatn policefightdmk supporters fightராயப்பேட்டை
Share
Tweet
SendShare
Previous Post

மாநில அளவிலான சப்-ஜூனியர் ஹாக்கி போட்டி – நிர்வாக கோளாறால் பங்கேற்க முடியாமல் திரும்பி சென்ற தேனி வீரர்கள்!

Next Post

மயானத்திற்கு சாலை வசதி கோரி சடலத்தை சாலையில் வைத்து போராட்டம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies