தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள விஜய்க்கு மத்திய அரசு அனுமதியுடன் Z+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
முதல்வர் விஜய்யின் வாகன அணிவகுப்பில் கருப்பு நிற SUV வாகனங்கள், ஆயுதமேந்திய பாதுகாப்பு அதிகாரிகள், ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்ட வாகனங்கள், கேமரா கண்காணிப்பு வாகனங்கள் மற்றும் குண்டு துளைக்காத வாகனங்கள் Z+ பாதுகாப்பில் இடம்பெறும்.
மொத்தம் 12 வாகனங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 55 பாதுகாப்புப் பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இதில் 10-க்கும் மேற்பட்ட NSG கமாண்டோக்கள் இடம்பெறுவார்கள் என தெரிகிறது.
மேலும் நவீன MP5 ரகத் துப்பாக்கிகள், தகவல் தொடர்பு சாதனங்கள், புல்லட் புரூஃப் வாகனங்கள், பைலட் வாகனங்கள் மற்றும் தங்கும் இடங்களில் 24 மணி நேர கண்காணிப்பு உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களும் Z+ பாதுகாப்பில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
















