எல்லாம் தெரிந்த திமுகவுக்கு எப்போதும் யதார்த்தம் புரியப் போவதே இல்லை என முதலமைச்சர் விஜய் விமர்சித்துள்ளார்.
சட்டப்பேரவையில் தவெக மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது உதயநிதி முன்வைத்த விமர்சனங்களுக்கு பதிலளித்து முதலமைச்சர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், தனிப்பட்ட முறையில் திமுகவின் வாக்கு சதவிகிதம் வெறும் 24.19% மட்டுமே என கூறியுள்ள அவர், சட்டமன்ற தேர்தலில் கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்ட தவெகவுக்கு 35% மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
டிஜிட்டல் முறையில் திமுக தேம்பி அழ வேண்டாம் என கூறியுள்ள முதலமைச்சர் விஜய், மக்களை விரைவில் தாங்கள் சந்திப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.
அதிகாரத்தை வைத்துக் கொண்டு ஆட்டம் போட்ட ஸ்டாலின் உள்ளிட்ட 15 திமுகவினர் தோல்வி அடைந்துமா இன்னும் திருந்தவில்லை? எனவும் முதலமைச்சர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மட்டும் தவெக நம்பி இருக்கவில்லை என கூறியுள்ள அவர், மக்களின் உணர்வுகளை நம்பி இருக்கிறோம் என தெரிவித்துள்ளார். மேலும், தனது ரீல் அறுந்து போனது தெரியாமல் திமுக திமிராகப் பேசுவதாகவும் முதலமைச்சர் விஜய் விமர்சித்துள்ளார்.
















