தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் சுற்றுவட்டார பகுதிகளான காட்டுமன்னார்கோவில், குமராட்சி, லால்பேட்டை, பிச்சாவரம், சாமியார் பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அதன்படி, வாழவாய்க்கால், விளமல், கமலாபுரம், அடியக்கமங்கலம், ஆண்டிபாளையம், கோமல், மாவூர், மாங்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தது.
இதேபோல் கடலூர் மாவட்டம் பண்ருட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் மிதமான மழை பெய்தது. இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
















