நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை நிலவுவதாக பரவிய தகவலுக்கு, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து HPCL மற்றும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளன. அதில், நாடு முழுவதும் அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் தேவையான பெட்ரோல் மற்றும் டீசல் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விநியோகத்தில் எவ்விதமான தடைகளோ அல்லது தாமதமோ இல்லை எனவும், வழக்கம்போல சீரான விநியோகம் நடைபெற்று வருவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் தேவையின்றி அச்சமடைய வேண்டாம் எனவும், சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் எண்ணெய் நிறுவனங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.
















