சென்னை அமைந்தகரையில் மழைநீர் வடிகால் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தவெக நிர்வாகி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை அமைந்தகரையில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து, தவெக நிர்வாகி குணசேகரன் உணவகம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அங்கு மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள சென்ற கள பொறியாளரையும், பணியாளரையும் குணசேகரன் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால், பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின்பேரில், அமைந்தகரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















