நெல்லை கைலாசநாதர் சுவாமி கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் கடந்த 16ஆம் தேதி வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் சுவாமியும், அம்பாளும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு கைலாசநாதர்-சவுந்தரவல்லி அம்மாள், பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதனையடுத்து, சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளிய கைலாசநாதருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், நமச்சிவாய கோஷம் முழங்க பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
















