அசாம் ஜோர்ஹாட் விமானப் படை தளத்தில், விமானப் படைக்குச் சொந்தமான ஏஎன்-32 ரக விமானம் தரையிறங்கியபோது திடீரென விபத்துக்குள்ளானது.
வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்த விமானம், விமானப் படை தளத்தில் தரையிறங்குவதற்கு சில விநாடிகளுக்கு முன்பாக தீப்பிடித்து விபத்துக்குள்ளான நிலையில், அதில் இருந்த விமானி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர், இடிபாடுகளை அகற்றி மீட்பு பணியில் துரிதமாக ஈடுபட்டுள்ளனர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நடைபெற்றதா? அல்லது மோசமான வானிலை காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
















