பிரான்சில் நடைபெறவுள்ள ஜி-7 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் சந்திக்கவுள்ளதை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு வார காலம் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் பிரான்ஸில் நடைபெறவுள்ள ஜி7 உச்சி மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார். இந்த மாநாட்டின் போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி இடையே முக்கிய சந்திப்பு நடைபெற உள்ளதை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.
அப்போது இரு தலைவர்களும் வர்த்தக ஒப்பந்தம், பிராந்திய மற்றும் உலகளாவிய முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த ஆண்டு பிப்ரவரியில் வாஷிங்டனில் நடைபெற்ற சந்திப்புக்குப் பிறகு, பிரதமர் மோடி மற்றும் அதிபர் டிரம்ப் ஆகியோர் மீண்டும் நேருக்கு நேர் சந்திக்கவுள்ளனர். இந்த சந்திப்பு சர்வதேச அரங்கில் முக்கிய கவனம் பெற்றுள்ளது.
















