பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை - சிறப்பு தொகுப்பு!
Aug 5, 2026, 04:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 14, 2026, 03:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பஞ்சாபில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாகிஸ்தானிலிருந்து ட்ரோன்கள் மூலம் ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்கள் வீசப்படும் சம்பவங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

பஞ்சாப்பில் எல்லை தாண்டிய வான்வழி ஊடுருவல்களின் எண்ணிக்கை மற்றும் கடத்தப்படும் பொருட்களின் அளவு கடுமையாக அதிகரித்துள்ளதாக போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் (NCB) மற்றும் மாநிலக் காவல் துறையின் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

2021-ல் மூன்று சம்பவங்களில் வெறும் 10 கிலோ போதைப்பொருள் மட்டுமே கைப்பற்றப்பட்டது. 2022 ல் 35 சம்பவங்களில் 148 கிலோவும், 2023-ல் 28 சம்பவங்களில் 103 கிலோவும், 2024-ல் 179 சம்பவங்களில் 236 கிலோவும் கைப்பற்றப்பட்ட நிலையில் 2025-ல் 305 தனித்தனி சம்பவங்களில் ட்ரோன்கள் மூலம் கடத்தப்பட்ட 468 கிலோ போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. கடந்த ஐந்து ஆண்டுகளில் இது கிட்டத்தட்ட 50 மடங்கு அதிகமாகும்.

அதுவே இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் 7 நாட்களில் மட்டும் 516 கிலோ ஹெராயினைப் பஞ்சாப் காவல்துறை கைப்பற்றியுள்ளது. கூடுதலாக கையெறி குண்டு உட்பட 122 துப்பாக்கிகள் 909 தோட்டாக்கள் மற்றும் 139 ட்ரோன்களையும் பஞ்சாப் காவல்துறை கைப்பற்றியுள்ளது. சொல்லபோனால் இந்தியாவிற்குள் கடத்தப்படும் மொத்த ஹெராயினில் சுமார் 58 சதவீதம் பஞ்சாப் வழியாகவே கடத்தப்படுவதாக தரவுகள் காட்டுகின்றன.

குறிப்பாக போதைப் பொருள் மட்டுமின்றி சீனா, ஆஸ்திரியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் தயாரிக்கப்பட்ட உயர்தர சிறிய ரக ஆயுதங்களும் ட்ரோன்கள் மூலம் இந்தியாவுக்குள் வீசப் படுகின்றன.

எல்லை தாண்டிய கடத்தல் கும்பல்கள் உள்ளூர் எல்லைப் பகுதி மக்களைத் தங்கள் பக்கம் இழுத்து, அவர்களை ஆயுதங்களைக் கொண்டு செல்லும் நபர்களாகப் (couriers) பயன்படுத்துகின்றன. பஞ்சாபில் உள்ள குற்றக் கும்பல்களிடமும், ஜம்மு-காஷ்மீரில் செயல்படும் தீவிரவாதக் குழுக்களிடமும் இந்த ஆயுதங்களைக் கொண்டு சேர்ப்பதே இவர்களின் முக்கியப் பணியாக உள்ளது.

ட்ரோன்கள் மூலம் வீசப்படும் போதைப்பொருட்கள் பெரும்பாலும் இந்த நபர்களுக்கான ஊதியமாகவே வழங்கப்படுகின்றன என்று உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜூன் 9 ஆம் தேதி 52 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் படைப்பிரிவுடன் இணைந்து ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா காவல்துறை நடத்திய கூட்டு நடவடிக்கையில், ஸ்ரீநகரிலிருந்து பாரமுல்லாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு வெள்ளை நிற மாருதி பிரெஸ்ஸா கார் தடுத்து நிறுத்தப் பட்டது.

அந்தக் காரில் , துருக்கியில் தயாரிக்கப்பட்ட CANIK TP9SF METE ரக அதிநவீன கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. இது முதலில் பஞ்சாப்பில் ட்ரோன் மூலம் வீசப்பட்டு காஷ்மீருக்கு கடத்தப் பட்டிருக்கலாம் என்று உளவுத் துறை கூறுகிறது.

இப்படிக் கடத்தப்படும் ஆயுதங்கள் மூலமாகவே ஜலந்தர் மற்றும் அமிர்தசரஸில் உள்ள ராணுவம் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) தளங்களுக்கு அருகில் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்துள்ளதாக சந்தேகிக்கப் படுகிறது.

ஆரம்பத்தில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பூச்சிக்கொல்லி தெளிப்பதற்காக சீனாவில் தயாரிக்கப்பட்ட வணிக ரீதியான விவசாய ட்ரோன்களைப் பயன்படுத்திய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இப்போது 10 கிலோ எடையைத் தாங்க கூடிய அதிநவீன குவாட்காப்டர்களைப் போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களை கடத்த பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த அதிநவீன ட்ரோன்கள் தரையிறங்கும்போதோ இடைமறிக்கப்படும்போதோ, அவற்றின் உள்ள ஜிபிஎஸ் மற்றும் விமானத் தரவுப் பதிவுகளைத் தானாகவே அழிக்கும்படி வடிவமைக்கப் பட்டுள்ளது.

எல்லை தாண்டிய கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள், சாட்டிலைட் இணைய சேவையைப் பயன்படுத்துவதால் இது உள்ளூர் ரேடியோ அலைவரிசையில் கண்டுபிடிக்க முடியாமல் போவதாக கூறப்படுகிறது.

இத்தகைய சூழலில், பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக எல்லைதாண்டிய போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல்களை தடுக்கவும் டிஜிட்டல் அச்சுறுத்தலை எதிர்கொள்ளவும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படி மத்திய பாதுகாப்பு அமைப்புகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை வேகப்படுத்தியுள்ளன.

Tags: punjabWeaponsnarcotics control bureausmuggling rise in punjab borderarms sumuggling
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

Next Post

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies