முன்னாள் அமைச்சர் வேலு தொடர்புடைய இடங்களில் ரூ.40 லட்சம் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்!
Sep 27, 2026, 06:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முன்னாள் அமைச்சர் வேலு தொடர்புடைய இடங்களில் ரூ.40 லட்சம் பறிமுதல் – லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 26, 2026, 06:22 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. இதில், கணக்கில் வராத 40 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 முதல் 2026 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித்துறை மற்றும்
2022-ஆம் ஆண்டு கரூர் மாவட்டத்தில் சாலை அமைக்காமலேயே, ஒப்பந்ததாரருக்கு பல கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக, அறப்போர் இயக்கம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் வேலு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி சாலைப் பணிகளில் முறைகேடு நடைபெற்றதாக அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட 11 பேர் மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, பதிவுசெய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், 4 கோடியே 19 லட்சம் ரூபாய் மதிப்பில் 4 சாலைகளை மேம்படுத்துவதற்கான பணிகளை தொடங்காத நிலையிலேயே,ஒப்பந்ததாரருக்கு 3 கோடியே 23 லட்சம் ரூபாய் விடுவிக்கப்பட்டு முறைகேடு நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைத்துறையில் முன்பு கரூரில் பணியாற்றி தற்போது, மதுரை மண்டல உதவிப் பொறியாளராக இருக்கும் கண்ணன்,நெடுஞ்சாலைத் துறையில் கரூர் மாவட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற உதவிப் பொறியாளர்கள் மற்றும்
கரூரைச் சேர்ந்த அரசு ஒப்பந்த நிறுவனமான சங்கரானந்த் இன்ஃப்ரா, பணியிட மாறுதல் பெற்ற உதவிப் பொறியாளர்கள் 8 பேர் உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஊழல் தடுப்புச் சட்டத்தின்படியும், கூட்டுச் சதி, பொதுப் பணத்தை முறைகேடு செய்தல், போலி ஆவணங்களை தயாரித்தல் என்பன உள்ளிட்ட 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டத்திற்குட்பட்ட சாலைப் பணிகளிலும் எந்தப் பணியும் மேற்கொள்ளப்படாமல், சுமார் 25 கோடி ரூபாய் வரை
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இந்த விவகாரம் தொடர்பாக புகார் அளித்திருந்ததாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், கணக்கில் வராத 40 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் முக்கிய ஆவணங்கள், மின்னணு ஆதாரங்கள், வழக்கு தொடர்பான நெடுஞ்சாலைத்துறை ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை, திருவண்ணாமலை, கரூர், கோவை, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் உள்ள 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags: raid in velu residenceDirectorate of Vigilance and Anti-Corruption.dvacformer DMK Minister E.V. Velu.forty lakhs seized
Share
Tweet
SendShare
Previous Post

காஞ்சிபுரத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம்

Next Post

தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் – 53 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க இலக்கு!

Related News

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி அக்.11-ல் ஆர்ப்பாட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

ஆர்.டி.ஐ சட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து!

ஏரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் – எ.வ.வேலு மீது வழக்குப்பதிவு!

இந்தியாவுடன் மோத துணியும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் – பிரதமர் மோடி

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகின்றனர் – தமிழிசை சௌந்தரராஜன்

கோவையில் உயிரை பணயம் வைத்து குட்கா கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த தலைமைக்காவலர் – குவியும் பாராட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

7 நாள் போர் நிறுத்த முன்மொழிவு நிராகரிப்பு மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் – சிறப்பு தொகுப்பு!

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பால் அம்பலமான ராகுலின் காந்தியின் நாடகம் – நயினார் நாகேந்திரன்!

தாராபுரம் இடைத்தேர்தல் மோதல் குறித்து காவல்துறை விசாரணை – அமைச்சர் சம்பத்குமார் தகவல்!

புதுச்சேரியில் மார்டின் அறக்கட்டளை சார்பில் இலவச UPSC பயிற்சி மையம் – துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்!

ஆசிய விளையாட்டு கபடி போட்டி ; மகளிர் அணியை தொடர்ந்து ஆடவர் அணியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை!

தனியார் கல்லூரியில் நடந்த விருதுகள் வழங்கும் விழா; கண்கலங்கிய சபாநாயகர்

ஆசிய விளையாட்டு ஹாக்கி தொடர்; இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணி தங்கம் வென்று சாதனை

அரிசி தட்டுப்பாட்டால் ரொட்டிக்கு மாறிய மக்கள் : கோதுமைக்காக இந்தியாவை நாடும் வங்கதேசம் – சிறப்பு தொகுப்பு!

அட்டிகா கோல்டு நிறுவனம் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை!

ஜெம் வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை – சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies