செஷல்ஸின் பாதுகாப்பு கட்டமைப்பில் இந்தியா - பிரதமர் மோடியின் மாஸ்டர் ப்ளான் : சிறப்பு தொகுப்பு!
Aug 5, 2026, 04:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செஷல்ஸின் பாதுகாப்பு கட்டமைப்பில் இந்தியா – பிரதமர் மோடியின் மாஸ்டர் ப்ளான் : சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 1, 2026, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடியின் செஷல்ஸ் பயணம் அந்நாட்டிற்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. ரோந்து கப்பல், ராணுவ ஆலோசகர்கள் நியமனம் என இரு நாடுகளுக்கு இடையிலான உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. இதுதொடர்பாக விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்….

இந்திய பெருங்கடலில் தீவு நாடாக அமைந்துள்ள செஷல்ஸிற்கு மூன்று நாட்கள் அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி சென்றார். இந்தப் பயணம் வெறும் தூதரக சடங்காக இல்லாமல், இருநாடுகளின் பாதுகாப்பு கட்டமைப்பை வளர்ச்சிப் பயணத்தில் கொண்டு செல்வதாக அமைந்துள்ளது. பாதுகாப்பு ஒத்துழைப்பு, திறன் மேம்பாடு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்ப கூட்டாண்மை ஆகியவற்றில் ஒரு பெரிய விரிவாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

முந்தைய செஷல்ஸ் அரசால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தியாவின் 4 ராணுவ ஆலோசகர்கள் நியமனம், தற்போதைய பயணத்தின் மூலம் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. இவர்கள் 4 பேரும் அந்நாட்டின் பாதுகாப்பு மற்றும் ராணுவ நிறுவனங்களுடன் இணைந்து, திட்டமிடல் மற்றும் பயிற்சிப் பணிகளை மேம்படுத்த உள்ளனர். இந்த நடவடிக்கை இந்திய பெருங்கடல் பகுதியில் செஷெல்ஸின் முதன்மையான பாதுகாப்பு பங்காளியாக இந்தியா திகழ்கிறது என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

கடல்சார் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன எல்ஸ்போயர் ரோந்து கப்பல், 10 லேசர் ரேடியல் படகுகள், 5 ரோந்து வாகனங்கள் மற்றும் 6 ஆம்புலன்ஸ் வாகனங்களை செஷெல்ஸ் நாட்டிற்கு வழங்கியது இந்தியா. இதன் மூலம் அந்த நாட்டின் கடல் எல்லை கண்காணிப்பு மேலும் வலுவடையும். செஷெல்ஸ் நாட்டின் ஒட்டுமொத்த கடல் மற்றும் வான்வழிப் பாதுகாப்பு சொத்துக்களில் பாதிக்கும் மேல் இந்தியா வழங்கியவை. செஷெல்ஸ் ராணுவ வீரர்களுக்கான ஒட்டுமொத்த பயிற்சியில் 70 சதவீதத்தை இந்திய ராணுவ கல்வி நிறுவனங்களே வழங்கி வருகின்றன.

இந்த இருதரப்பு கூட்டாண்மை, பாரம்பரிய பாதுகாப்பு ஒத்துழைப்பையும் தாண்டி அடுத்த கட்டத்திற்கும் பரிணமித்து வருகிறது. அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை ஆழமாக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.

இந்தியா – செஷல்ஸ் இடையே சுமார் 1,250 கோடி ரூபாய் மதிப்பிலான நிதியுதவி ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை, விண்வெளி, சுகாதாரம், விவசாயம் மற்றும் கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாடுகளும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறிக்கொண்டன.
செஷல்ஸ் உட்கட்டமைப்பு மற்றும் உணவு தேவைகளுக்காக 500 மெட்ரிக் டன் அரிசி மற்றும் 8,500 மெட்ரிக் டன் சிமெண்ட் ஆகியவற்றையும் இந்தியா வழங்கியுள்ளது.

இந்தியா இனி செஷெல்ஸ் நாட்டிற்கு சாதாரண உதவி வழங்கும் நாடு அல்ல. மாறாக, அந்நாட்டின் பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் ராணுவக் கட்டமைப்பின் ஒரு முக்கிய அங்கமாகவே மாறிவிட்டது. இதன் மூலம் இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் ராஜதந்திர கை ஓங்கியுள்ளது என்பதில் சந்தேகமே இல்லை…

Tags: patrol vesselSeychelles securityfour Indian military advisors'Lspoyer' patrol vesselIndian OceanPrime Minister Modi's visit.Seychelles
ShareTweetSendShare
Previous Post

அதிமுகவில் இருந்து துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சி – இபிஎஸ் பேச்சு!

Next Post

தவெக ஆட்சி 5 ஆண்டுகள் முழுமையாக நீடிக்கும் – முதலமைச்சர் விஜய் உறுதி!

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies