அமைச்சருக்கு அப்புறம் ஆதரவுக் கரம் நீட்டலாம், முதலில் அரசுப்பள்ளிகளை கவனியுங்கள் - நயினார் நாகேந்திரன்
Oct 8, 2026, 02:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமைச்சருக்கு அப்புறம் ஆதரவுக் கரம் நீட்டலாம், முதலில் அரசுப்பள்ளிகளை கவனியுங்கள் – நயினார் நாகேந்திரன்

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 8, 2026, 06:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமைச்சருக்கு அப்புறம் ஆதரவுக் கரம் நீட்டலாம், முதலில் அரசுப்பள்ளிகளை கவனியுங்கள் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், வகுப்புகள் துவங்கி ஒரு மாதம் கடந்த பிறகும் கூட, தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கும் பெரும்பாலான 4&5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களும், இடைநிலை மாணவர்களுக்கு பயிற்சி ஏடுகளும், 1 முதல் 3 ஆம் வகுப்புகள் எடுக்கும் ஆசிரியர்களுக்கு “ஆசிரியர் கையேடு”களும் இன்னும் முறையாக வழங்கப்படவில்லை என்று வெளியாகியுள்ள செய்திகள் கல்வி வட்டாரத்தில் பெரும் சலசலப்பையும், பெற்றோர் மத்தியில் கடும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கோடைக்காலம் முடிந்து சரியாக பள்ளிகள் திறக்கப்படும் வேளையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற நீங்கள், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தேவைக்கேற்ப ஆசிரியர்கள் இருக்கின்றனரா, பாடப்புத்தகங்கள் முழுவதுமாக பிள்ளைகளுக்கு கிடைக்கப் பெற்றனவா, பள்ளிகளில் தரமான வகுப்பறைகள், சுத்தமான குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் உள்ளனவா என்பதைத் தானே முதலில் ஆய்வு செய்து உறுதிபடுத்தியிருக்க வேண்டும்? என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால், நீங்களோ அரசுப் பள்ளி மாணவிக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்பதை அதிகாரத் தொனியில் குத்திக் காட்டிய அமைச்சர் செல்வி. கீர்த்தனா அவர்களின் So called “ஆய்வு” சரி தான் என்று கூறி வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கிறீர்கள். ஆகச் சிறந்த கல்வித்துறை உங்களை நம்பி ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

எங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் உங்கள் செயல்பாடுகளை மட்டுமே சார்ந்துள்ளது. எனவே, உங்கள் பொறுப்புணர்ந்து செயல்படுங்கள் அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களே! அரசுப் பள்ளிகளில் தரமான கல்வியையும், பிள்ளைகளின் பாதுகாப்பையும் உறுதி செய்யுங்கள் என அமைச்சர் ராஜ்மோகனுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

Tags: School Bookstamilnadu bjp state presidentMinister Rajmohannainar nagendran press meet
Share
Tweet
SendShare
Previous Post

தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டண விவரங்களை அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம்

Next Post

பாதுகாப்பு தளவாட உற்பத்தி துறையில் அதிகரிக்கும் தனியார் பங்களிப்பு – நனவாகும் சுயசார்பு கனவு – சிறப்பு கட்டுரை!

Related News

பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார் – கோவா இல்லத்தில் அதிகாலை உயிர் பிரிந்தது!

திமுகவின் மொழி அரசியலுக்கு தவெக அரசும் அடிபணிவது வேதனை அளிக்கிறது – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

சொத்து விவரங்களை தாக்கல் செய்தால் மட்டுமே தமிழக அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையோர உணவகங்களில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆய்வு!

தமிழகத்தில் அக். 10ம் தேதி புதிய வாக்காளர் சேர்ப்பு முகாம்!

பாதுகாப்பான வாழ்வுக்கு, நம் பாரம்பரியத்தை பின்பற்றவது தான் சரியான வழி – மோகன் பாகவத்

Load More

அண்மைச் செய்திகள்

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான நிபந்தனைகள் தளர்வு!

இந்தியா, இஸ்ரேலை அச்சுறுத்த புதிய பயங்கரவாத தாக்குதல் அலை வரலாம் – இஸ்ரேல் தூதர் ரூவென் அசார் எச்சரிக்கை

பிரதமர் மோடியை வீழ்த்த சர்வதேச அளவில் சதி – செர்பிய முன்னாள் அதிபர் தகவல்!

ரஷ்யாவில் 70,0000 இந்தியர்களுக்கு பணிவாய்ப்பு : ஏற்றுமதியை அதிகரிக்கவும் மத்திய அரசு வியூகம் – சிறப்பு தொகுப்பு!

முடிவுக்கு வரும் ரஷ்யா- உக்ரைன் போர்? : பிரதமர் மோடி முன்முயற்சி, அதிபர் புதின் பாராட்டு – சிறப்பு தொகுப்பு!

தலைமை தேர்தல் ஆணையர் செயல்பாட்டில் ராகுல் என்ன குறை கண்டார் – நயினார் கேள்வி!

வெற்றிப் பயண திட்டத்தால் வாழ்வாதாரம் பாதிப்பு – தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் வேதனை!

சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணையில் முதலமைச்சர் விஜய் ஆய்வு!

பழனி கோயில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கு – மேலும் இருவர் கைது!

25 ஆண்டுகள் அரசு தலைமைப் பொறுப்பில் இருப்பேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies