உலகின் மூன்று மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக மாறுவோம்; பிரதமர் மோடி
Aug 5, 2026, 03:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகின் மூன்று மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக மாறுவோம்; பிரதமர் மோடி

Manikandan by Manikandan
Jul 9, 2026, 10:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா விரைவில் உலகின் முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக மாறும் என்றும், மேட் இன் இந்தியா 6ஜி தொழில்நுட்பத்தை நோக்கி இந்தியா வேகமாக பணியாற்றி வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், ‘மெல்போர்ன் மீட்ஸ் மோடி’ என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி மெல்போர்னின் மார்வெல் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில், 30 ஆயிரம் இந்திய வம்சாவளியினர் திரண்டு பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மகிழ்ச்சி ஆரவாரத்துடன் மோடி..மோடி..என்று முழக்கமிட்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தனது உரையை “வணக்கம் மெல்போர்ன்” என்று தமிழில் தொடங்கினார். தொடர்ந்து இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வணக்கம் தெரிவித்ததால் இந்திய வம்சாவளியினர் உற்சாகத்துடன் ஆர்ப்பரித்தனர்.

இதைத்தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா உறவு மிகப்பெரிய உயரத்தை அடைந்துள்ளதாக தெரிவித்தார். கடந்த 12 ஆண்டுகளில் 3வது முறையாக ஆஸ்திரேலியாவுக்கு வருவதாகவும், இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான கிரிக்கெட் உறவு உணர்ச்சிப் பூர்வமானது என்றும் குறிப்பிட்டார். விரைவில் உலகின் முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக ஆவதே இந்தியாவின் இலக்கு என்றும், இந்தியா தனது ‘ககன்யான்’ விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பத் தயாராகி வருவதாகவும் குறிப்பிட்டார். இந்தியா உலகின் இரண்டாவது பெரிய 5ஜி சந்தையாக உருவெடுத்துள்ளதாகவும், மேட் இன் இந்தியா 6ஜி தொழில்நுட்பத்தை நோக்கி இந்தியா வேகமாக பணியாற்றி வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதனிடையே, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீசுக்கு
நன்றி தெரிவிக்கும் வகையில் செல்போன் டார்ச்களை ஒளிரவிடுமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். இதையடுத்து, அரங்கில் இருந்த அனைவரும் தங்களது மொபைல் டார்ச்களை ஒளிரவிட்டனர். இதனை உணர்ச்சிப் பெருக்குடன் ஆஸ்திரேலிய பிரதமர் ஏற்றுக்கொண்டார்.

Tags: AustraliaNarendraModianthony albanese
ShareTweetSendShare
Previous Post

அதிரடி காட்டும் மத்திய அரசு : விரைவில் வருகிறது E25 பெட்ரோல் – சிறப்பு தொகுப்பு!

Next Post

இன்று கரூர் செல்கிறார் முதல்வர் விஜய் – கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசு பணி நியமன ஆணை வழங்குகிறார்!

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies