உலகக்கோப்பை கால்பந்து - அர்ஜென்டினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது ஸ்பெயின்!
Aug 5, 2026, 04:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகக்கோப்பை கால்பந்து – அர்ஜென்டினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது ஸ்பெயின்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 20, 2026, 06:18 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

FIFA உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில், அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின் அணி, 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.

48 அணிகள் பங்கேற்ற உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி, அமெரிக்காவின் நியூயார்க் – நியூ ஜெர்சி மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது. அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதிய இந்த போட்டியில், தொடக்கம் முதல் இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

இதையடுத்து ஆட்டம் கூடுதல் நேரத்துக்குச் சென்றது. அப்போது, 106-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் மாற்று வீரர் ஃபெரான் டோரஸ் அடித்த அற்புதமான கோல் வெற்றியை உறுதி செய்தது. இறுதிவரை அர்ஜென்டினா சமன் செய்ய கடுமையாகப் போராடியபோதிலும், ஸ்பெயின் வீரர்கள் அபாரமான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி கோல் வாய்ப்புகளை முறியடித்தனர்.

இதன் மூலம், அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின் அணி, 2010-ம் ஆண்டுக்குப் பிறகு 16 ஆண்டுகள் கழித்து, 2வது முறையாக உலகக் கோப்பையை வென்று உலக சாம்பியன் பட்டத்தை மீண்டும் கைப்பற்றியது.

முன்னதாக நடைபெற்ற நிறைவு விழாவில் ஆஸ்கர் விருது பெற்ற அமெரிக்க பாடகியும், நடிகையுமான ஜெனிபர் ஹட்சன் அமெரிக்காவின் தேசிய கீதத்தைப் பாடினார். தொடர்ந்து ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ், பிரிட்டிஷ் பாப் பாடகர் ராபி வில்லியம்ஸ், அமெரிக்க பாடகியும் நடிகையுமான நிக்கோல் ஷெர்சிங்கர், இத்தாலிய பாடகி லாரா பவுசினி மற்றும் இணையப் பிரபலமான ஐஷோஸ்பீட் ஆகியோர் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் ரசிகர்களை உற்சாகப்படுத்தின.

உலகக்கோப்பை வரலாற்றில் முதல்முறையாக நடைபெற்ற இடைவேளை இசை நிகழ்ச்சியில், அமெரிக்க பாப் இசை நட்சத்திரம் மடோனா, கொலம்பிய பாடகி ஷகிரா, கனடிய பாப் பாடகர் ஜஸ்டின் பீபர், தென் கொரிய கே-பாப் இசைக் குழுவான BTS மற்றும் நைஜீரிய கிராமி விருது பெற்ற பாடகர் பர்னா பாய் ஆகியோர் பங்கேற்றனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், FIFA தலைவர் ஜியானி இன்ஃபான்டினோ, ஸ்பெயின் மன்னர் 6-ம் ஃபெலிப்பே, ஸ்பெயின் டென்னிஸ் நட்சத்திரம் கார்லோஸ் அல்கராஸ், அமெரிக்க டென்னிஸ் ஜாம்பவான் செரீனா வில்லியம்ஸ், அமெரிக்க பாப் இசைப் பாடகி பியான்சே மற்றும் அமெரிக்க ராப்பர் ஜே-ஸி உள்ளிட்ட பல்வேறு உலகப் பிரபலங்களும் போட்டியை நேரில் கண்டு ரசித்தனர்.

Tags: spain wonspani championargentina lostfootball world cup 2026fifa world cup 2026fifa world cup 2026 songfifa world cup 2026 livefifa world cup 2026 matchesfifa world cup 2026 previewsfifa world cup 2026 stadiumsfifa world cup final
ShareTweetSendShare
Previous Post

ஜப்தி செய்யப்பட்ட சொத்துக்களை உரிமையாளர்களுக்கு ஏலம்விடக் கூடாது;ரிசர்வ் வங்கி

Next Post

ஊழல் குறித்து முன்னாள் அமைச்சர் மூர்த்தி பேசுவது நகைச்சுவையாக உள்ளது – அமைச்சர் ராஜ்மோகன்

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies