நாட்டின் முதல் 1200 kV டிரான்ஸ்பார்மர் : இந்தியாவின் மின்சாரப் புரட்சி, வல்லரசுகளுக்கு சவால் - சிறப்பு தொகுப்பு!
Aug 5, 2026, 04:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டின் முதல் 1200 kV டிரான்ஸ்பார்மர் : இந்தியாவின் மின்சாரப் புரட்சி, வல்லரசுகளுக்கு சவால் – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 31, 2026, 04:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டின் முதல் 1200 kV டிரான்ஸ்பார்மரை தயாரித்து, மத்திய பிரதேசத்தின் பீனா தேசிய சோதனை நிலையத்தில் வெற்றிகரமாகநிறுவப் பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவையே பின்னுக்குத் தள்ளி, சீனாவுக்கு அடுத்தபடியாக 1200 kV அல்ட்ரா ஹை வோல்டேஜ் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக இயக்கி இந்தியா சாதனை படைத்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

அடுத்த ஆண்டுக்குள் இந்தியாவின் மின்சாரத் தேவை 500,000 மெகாவாட்-க்கும் அதிகமாகும் என்று கணக்கிடப் பட்டுள்ளது. இதற்கேற்ப சுமார் 700,000 மெகா வாட் நிறுவப்பட்ட உற்பத்தித் திறன் தேவைப் படும் என்றும் மதிப்பிடப் பட்டுள்ளது.

உற்பத்தி செய்யப்படும் இந்த மின்சாரம், சரியாக வெளியேற்றப்படுவதும் முறையாக கொண்டுசெல்லப் படுவதும் மற்றும் சிதறல் இல்லாமல் வீணாகாமல் விநியோகப் படுவதும் அவசியமாகிறது.

நீண்ட தூரங்களுக்கு மின்சாரத்தைக் கொண்டு செல்வதற்கான மிகப்பெரிய மின் மாற்றி நெட்வொர்க்கும் அதற்கான சுற்றுச் சூழல் அமைப்பும் அதிநவீன தொழில்நுட்பமும் தேவைப் படுகிறது.

குறிப்பாக இந்தியா போன்ற பெரிய நாட்டில் மாநிலங்களுக்கு இடையேயான வழித்தட உரிமை சார்ந்த கூடுதல் சவால்களும் உள்ளன.

இந்தியாவைப் பொறுத்தவரை, வடமாநிலங்களில் தான் அதிகமான மின்சார உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் அதிகமான மின்சாரத் தேவை முதன்மையான தொழில் மையமான மேற்கு தெற்கு மற்றும் மத்திய பகுதி மாநிலங்களில் தான் உள்ளன. இதற்காக நாட்டின் கடலோரப் பகுதிகளில் பெரும்பான்மையான மின்சார உற்பத்தி திட்டங்கள் செயல்பட்டு வந்தாலும் உற்பத்தியாகும் மின்சாரத்தை வீணாகாமல் நீண்ட தூரம் கொண்டு செல்வது சிரமமாகவே உள்ளது.

தற்போதுள்ள 400KV மின்பாதையின் மூலம் 600 MW மின்சாரத்தையே பரிமாற்றம் செய்யமுடியும். இதன்படி 800KV மின்பாதையின் சுமை திறன் 1200 முதல் 2400 MV வரை உள்ளது. 1200 KV மின்பாதையின் மின் செலுத்தும் திறன் 6000 முதல் 8000 MV வரை உள்ளது. நீண்ட தூரங்களுக்கு மின்சாரத்தைக் கொண்டுசெல்வதற்கு இது ஒன்றே ஒரே தீர்வாகும்.

நீண்ட கால மின் பரிமாற்ற தேவையைப் பூர்த்தி செய்வதற்காக நாட்டில் உள்ள அனைத்து மின் நிலையங்களையும் ஒருங்கிணைக்கும் ஒரு பெரிய மின் மாற்று நெட்வொர்க்கை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது.

அதிகரித்துவரும் மின் தேவையைக் கருத்தில் கொண்டு பல்வேறு மாநிலங்களுக்கான மின் பாதை பரிமாற்றத்துக்காக முதல் முயற்சியாக 1200 KV மின் பரிமாற்ற அமைப்பு உருவாக்கப் பட்டுள்ளது.

குறைந்த இழப்புடன் அதிகப்படியான மின்சாரத்தை நீண்ட தூரத்திற்கு கொண்டு செல்வதற்காக 333 MVA திறன் கொண்ட இந்தியாவின் முதல் உள்நாட்டு 1200 kV அதி உயர் மின்னழுத்த மாறுதிசை மின்னோட்ட (UHVAC) மின்மாற்றியை BHEL நிறுவனம் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.

ஏற்கெனவே ஒரு துணை மின் நிலையத்தில் பயன்படுத்தப்படும் மிகப்பெரிய உபகரணமான இந்த மின்மாற்றியை உருவாக்குவதற்காக, BHEL நிறுவனம் பவர்கிரிட் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது.

BHEL நிறுவனத்தால் வெற்றிகரமாக உருவாக்கப்பட்ட 333 MVA, 1150/400/33 kV, ஒற்றைக் கட்ட, ஆட்டோ மின்மாற்றியானது, பவர்கிரிட் நிறுவனத்தால் மத்தியப் பிரதேசத்தின் பீனாவில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் சோதனை 1200 kV தேசிய சோதனை நிலையத்தில் நிறுவப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் 1200 kV அல்ட்ரா ஹை வோல்டேஜ் (UHVAC) தொழில்நுட்பம் மத்திய பிரதேசத்தின் பீனா தேசிய சோதனை நிலையத்தில் வெற்றிகரமாக நிறுவப் பட்டுள்ளது. இது 6000 MW முதல் 8000 MW வரை மின்சாரத்தைச் சுமந்து செல்லும் ஆற்றல் கொண்டதாகும்.

1200 kV அதி உயர் மின்னழுத்த மாறுதிசை மின்னோட்ட மின்மாற்றியை வெற்றிகரமாகச் செயல்பாட்டிற்குக்
கொண்டு வந்திருப்பதுடன் நாட்டில் முதல் வணிகரீதியான 1200 kV மின்பரிமாற்ற அமைப்பை உருவாக்கி இருப்பது இந்தியாவின் சாதனையாகும்.

Tags: 1200 kV ultra-high voltage technology.Indiamadhya pradeshfirst 1200 kV transformerBina National Test Station
ShareTweetSendShare
Previous Post

வெற்றி பெறாமலேயே வெற்றி, போரில் ஈரான் சாதித்தது எப்படி? : நவீன போரின் புதிய கணக்கு – சிறப்பு தொகுப்பு!

Next Post

இந்தியாவுக்கு 100 % கூடுதல் வரி : ட்ரம்புக்கு அதிகாரம் வழங்கும் மசோதா செனட் சபை ஒப்புதல் – சிறப்பு தொகுப்பு!

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies