முதலீடுகளை ஈர்ப்பதில் முதல்வர் விஜய் தனி கவனம் செலுத்த வேண்டும் - நயினார் நாகேந்திரன்
Sep 15, 2026, 03:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதலீடுகளை ஈர்ப்பதில் முதல்வர் விஜய் தனி கவனம் செலுத்த வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 1, 2026, 10:18 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

முதலீடுகளை ஈர்ப்பதில் முதல்வர் விஜய் தனி கவனம் செலுத்த வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில்,  2025-2026 ஆம் ஆண்டிற்கான அதிக புதிய முதலீடுகளை ஈர்த்த TOP 10 மாநிலங்களின் பட்டியலில், தமிழகம் 10 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள ஊடகச் செய்தி கடும் அதிர்ச்சியளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

நமது மாநிலத்தின் தொழில் முதலீடுகள் எந்தளவிற்கு நலிவடைந்துள்ளன என்பதற்கான சான்றாக விளங்கும் இந்த தகவலை, தற்போதைய தவெக அரசாவது சற்று தீவிரமாகக் கையாள வேண்டும்.

“ஒரு காலத்தில் நாங்கள் இப்படி இருந்தோம், அப்படி இருந்தோம்” என்ற கடந்த கால வெற்றியையே பேசிக் கொண்டிருந்தால், நிகழ்கால வளர்ச்சியும் எதிர்கால லட்சியமும் கேள்விக்குறியாகிவிடும் என்பதைத் தான் தமிழக பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என கூறியுள்ளார்.

புதிய தொழில் முதலீடுகளுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தாமல், பழங்கதைகளைப் பேசியும், வெற்று பேப்பரில் மட்டுமே பதிவாகிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் மட்டுமே வைத்து, தங்களது ஐந்து ஆண்டுகளையும் ஒப்பேற்றி விட்டது திமுக என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

‘அதன் விளைவால் தான், புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் சோடை போயுள்ளது. பெரிய பெரிய நிறுவனங்களும் பிற மாநிலங்களை நோக்கி படையெடுக்கின்றனர். எனவே, முந்தைய திமுக ஆட்சியில் இருந்தாவது தற்போதைய தவெக அரசு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பரந்தூர் விமான நிலையம் உள்ளிட்ட மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களை கண்ணை மூடிக் கொண்டு எதிர்க்கும் போக்கை கைவிட வேண்டும்! இணைப்பு வசதிகள், உட்கட்டமைப்பு வசதிகள், கடன் வசதிகள், மானியங்கள், சட்ட அனுமதிகள் ஆகியவற்றை எளிதாக்கி, மேம்படுத்தி புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டுமென முதல்வர்  ஜோசப் விஜய்யை நயினார் நாகேந்திரன வலியுறுத்தியுள்ளார்.

Tags: nainar nagendran press meetcm vijay tvkcm vijay liveattracting investments.tamilnadutamilnadu bjp state presidenttamil nadu cm vijaycm vijay
Share
Tweet
SendShare
Previous Post

காவிரி நதிநீர் விவகாரம் – அனைத்து கட்சியினருடன் முதல்வர் விஜய் பிரதமரை சந்திக்க வேண்டும் என அன்புமணி வேண்டுகோள்!

Next Post

கேரளாவில் கொட்டி தீர்க்கும் மழை – 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

Related News

சென்னையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பாக மோதல் – அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு!

மதுராந்தகம் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல்!

செங்கம் அருகே சுங்கச்சாவடியில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் கல்லூரி பேருந்து ஓட்டுநர்கள் ரகளை : பேருந்துகளை குறுக்கே நிறுத்தியதால் போக்குவரத்து பாதிப்பு!

முதல்வர் குறித்து அவதூறு பேச்சு : ஆ.ராசா, சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

மசூத் அஸார் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு வெகுமதி உயர்வு – பாகிஸ்தான் அரசு அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

விநாயகரை அவமதித்த தவெகவினரை கைது செய்க – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

முழு பயன்பாட்டுக்கு வந்தது 2,843 கி.மீ., நீள பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடம்!

டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா பிரதமர் மோடி பங்கேற்று வழிபாடு!

மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு விழா – 12 கோபுரங்களுக்கு பிரம்மாண்ட மாலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் – இபிஎஸ் நம்பிக்கை!

முதல்வரின் லண்டன் பயணத்தில் 12,300 கோடி முதலீடு ஈர்ப்பு – புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

விடுமுறை முடிந்து பேருந்து நிலையங்களில் குவிந்த பயணிகள் – போதிய பேருந்துகள் இல்லாததால் அவதி!

செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பின் போது பவர் கட்; மின்வாரியம் விளக்கம்

தமிழகத்தில் ரூ.11,000 கோடி ரூபாய் முதலீடு; முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம்

தாக்குதலை தீவிரப்படுத்தும் ஹவுதி அமைப்பினர் : என்ன செய்யப்போகிறார் அதிபர் ட்ரம்ப்? – சிறப்பு கட்டுரை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies