தமிழ்நாட்டின் நலன் மீது அக்கறை இல்லாதவர்களே, அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.
தொகுதி மறுவரையறை தொடர்பாக ஆலோசிக்க முதல்வர் ஜோசப் விஜய் அழைப்பு விடுத்திருந்த அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டத்தை எதிர்க்கட்சிகள் அனைத்தும் புறக்கணித்துள்ளன.
இதுகுறித்து எக்ஸ் தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மாணிக்கம் தாகூர், தமிழ்நாட்டின் நலன்களை விட தங்களது அரசியலை முன்னிலைப்படுத்துபவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்காமல் இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அரசியலைவிட தமிழ்நாட்டை முதன்மைப்படுத்துபவர்கள், முதலமைச்சர் விஜய் விடுத்துள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்றும் கூறியுள்ளார்.
இது கட்சி அரசியல் குறித்தது அல்ல என்றும், தமிழ்நாட்டின் உரிமைகள், நலன்கள் மற்றும் எதிர்காலம் குறித்தது எனவும் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டு மக்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ள மாணிக்கம் தாகூர்,முக்கியமான தருணத்தில் தமிழ்நாட்டின் பக்கம் யார் நின்றார்கள் என்பதை மக்கள் என்றும் நினைவில் வைத்திருப்பார்கள் எனவும் கூறியுள்ளார்.
















