73 லட்சமா 73 ஆயிரமா? - பட்டா தொடர்பாக கேகேஎஸ்எஸ்ஆர், செங்கோட்டையன் விவாதம்!
Aug 12, 2026, 01:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

73 லட்சமா 73 ஆயிரமா? – பட்டா தொடர்பாக கேகேஎஸ்எஸ்ஆர், செங்கோட்டையன் விவாதம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 11, 2026, 06:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

 தமிழக சரித்திரத்தில் 73 லட்சம் பேருக்கு பட்டா வழங்கியதில்லை என வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேசிய தவெக சட்டமன்ற உறுப்பினர் சுகுமார், கடந்த ஆட்சி காலத்தில் பட்டா முறையாக வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டினார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய முன்னாள் அமைச்சரும், திமுக உறுப்பினரமான கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், கடந்த 5 ஆண்டுக் காலத்தில் மட்டும் 73 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

பட்டா கொடுப்பதற்கு தகுதியுள்ள இடம், தகுதி இல்லாத இடம் என பிரிப்பவர்களுக்கு தெரியும் என்றும், உறுப்பினர் பொத்தம் பொதுவாக கூறக்கூடாது எனவும் தெரிவித்தார். ஒவ்வொரு அரசாங்கமும் பட்டா வழங்க தான் முயற்சி செய்து வருவதாகவும் குறிப்பிட்டார். மேலும், கடந்த வருடங்களில் தமிழக வரலாற்றில் 73 லட்சம் பேருக்கு ஸ்டாலின் தான் பட்டா வழங்கியதாகவும் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த அவை முன்னவர் செங்கோட்டையன், முதலில் 73 ஆயிரம் என்றார்கள், பின்னர் 73 லட்சம் என்று கூறுகிறார்கள் என விமர்சித்தார். இதுவரை தமிழக சரித்திரத்தில் 73 லட்சம் பேருக்கு பட்டா வழங்கியதில்லை என்றும், 7 லட்சம் என்றால் சரி எனவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் கமலி, பட்டா இருக்கிறது இடம் எங்கே என்று தன்னிடம் மக்கள் கேட்பதாகவும், பட்டா போட்டதற்கு இடம் வழங்குவதாக கூறியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இது தொடர்பான மனுக்களை தானே வாங்கி சேகரித்து வைத்துள்ளதாகவும் அமைச்சர் கமலி கூறினார்.

இதனை அடுத்து பேசிய அவை முன்னவர் செங்கோட்டையன், பட்டா வழங்கப்பட்டு இடம் வழங்கப்படவில்லை என்ற குறைபாடுகள் தன்னுடைய கவனத்தில் இருப்பதாகவும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.

Tags: pattas debateTamil Nadutamilnadu assembelyK.K.S.S.R. RamachandranRevenue Minister Sengottaiyan
Share
Tweet
SendShare
Previous Post

தனியார் பங்களிப்புடன் அடையாறு கூவம் ஆறு தூர்வாரும் பணிகள் – அமைச்சர் ஆனந்த்

Next Post

குறையும் குழந்தை பிறப்பு : அதிகரிக்கும் முதியோர் ஜனத்தொகை : முடங்கும் ஐரோப்பிய பொருளாதாரம்? – சிறப்பு தொகுப்பு!

Related News

அடுத்த 15 நாட்களுக்கு தினமும் ஒரு டிஎம்சி நீர் திறக்க வேண்டு; கர்நாடகாவுக்கு உத்தரவு

குறையும் குழந்தை பிறப்பு : அதிகரிக்கும் முதியோர் ஜனத்தொகை : முடங்கும் ஐரோப்பிய பொருளாதாரம்? – சிறப்பு தொகுப்பு!

தனியார் பங்களிப்புடன் அடையாறு கூவம் ஆறு தூர்வாரும் பணிகள் – அமைச்சர் ஆனந்த்

நீட் ரத்து இல்லையென்றால் பணம் படைத்தவர்களின் குழந்தைகள் தான் மருத்துவபடிப்பில் சேர முடியும் – பாஜக எம்எம்ஏ போஜராஜன்

இடமாற்றமும், நெஞ்சில் இருக்கும் புகைப்பட மாற்றமும் – ஓபிஎஸ், செங்கோட்டையன் காரசார விவாதம்!

நீட் நுழைவுத் தேர்வு – தமிழக மாணவர்கள் சாதனை!

Load More

அண்மைச் செய்திகள்

73 லட்சமா 73 ஆயிரமா? – பட்டா தொடர்பாக கேகேஎஸ்எஸ்ஆர், செங்கோட்டையன் விவாதம்!

ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – ட்ரம்ப் வலியுறுத்தல்!

இன்றைய தங்கம் விலை!

தஞ்சை அருகே கோயில் நிலத்தில் ஈ.வெ.ரா சிலை – ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் பங்கேற்ற சபாநாயகர் சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழகத்தில் மட்டும் No Delimitation நாடகம் ஏன்? : தயாநிதி மாறன் கேள்வி!

நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ளள ரஷ்ய விண்வெளி வீரர்கள் – இந்திய மக்களுக்கு தந்திர தின வாழ்த்து!

அமலாக்கத்துறை கடிதம் எழுதியும், முந்தைய திமுக அரசு, முன்னாள் அமைச்சர் நேருவை பாதுகாத்தது – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒவ்வொருவரின் உணர்வில் கலந்துள்ளது – பாஜக எம்எல்ஏ போஜராஜன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies