டெல்டா விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு நிதியை உடனே வழங்க வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
‘அவர் விடுத்துள்ள பதிவில், குறுவை சாகுபடி செய்யும் டெல்டா விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் வகையில், ₹134.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்தும், இதுவரை ஒரு பைசா கூட விவசாயிகளின் கைக்கு வந்து சேரவில்லை என்ற செய்தி அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
குறுவை தொகுப்புத் திட்டத்துக்கான நிதியை விவசாயிகளுக்கு வழங்கிவிட்டதாகச் சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தெரிவித்த நிலையில், கள நிலவரமோ முற்றிலும் வேறாக உள்ளது.
இயந்திர நடவு ரசீது உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பித்தும், இதுவரை நிதி வழங்கப்படவில்லை என விவசாயிகள் குமுறி வருகின்றனர்.
அறுவடைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், இனியும் காகித அறிவிப்புகளால் காலத்தைக் கடத்தாமல், குறுவை தொகுப்பு நிதியை உடனடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
















