இந்து அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நியூயார்க் சென்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்துக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வரும் 29ஆம் தேதி இந்து அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில், வெளிநாடு வாழ் இந்தியர்களைச் சேர்ந்த 5 ஆயிரம் உறுப்பினர்கள் மத்தியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் உரையாற்ற உள்ளார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா உலகளாவிய மக்களை தொடர்பு கொள்ளும் திட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மோகன் பாகவத் நியூயார்க்கு வருகை தந்தார். அப்போது, அவருக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனிடையே மோகன் பாகவத்தின் மேடிசன் ஸ்கொயர் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த நியூயார்க் மேயர் மம்தானிக்கு அமெரிக்கப் பாடகி மேரி மில்பென் பதிலடி கொடுத்துள்ளார். சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் மோடி மற்றும் பாஜகவை எதிர்ப்பதாலேயே, மோகன் பகவத் பங்கேற்கும் நிகழ்ச்சியை மம்தானியும், அவரது சோசலிசக் கொள்கை கொண்ட பைத்தியக்காரத்தனமான நபர்களும் எதிர்க்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
















