கும்பகோணத்தில் மதுபானக் கடையில் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தஞ்சை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கடைகள் மூடப்பட்டதால் மதுப்பிரியர்கள் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில், கும்பகோணம் கருப்பூர் புறவழிச்சாலையில் உள்ள மதுபானக் கடையில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு கூட்டம் அலைமோதியது.
தகவலறிந்து வந்த போலீசார் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி, அந்த மதுக்கடையையும் உடனடியாக மூட உத்தரவிட்டனர்.
















