நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி காணாமல் போனவர்களின் உறவினர்களிடம், டிஎன்ஏ பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் சேகரிக்கும் பணி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களைச் சேர்ந்த சிலர் மாயமான நிலையில் அவர்களின் உறவினர்கள், உரிய அடையாளச் சான்றுடன் வந்து ரத்த மாதிரிகளை வழங்கினர்.
இதனிடையே, சேகரிக்கப்படும் ரத்த மாதிரிகள் உடனடியாக பரிசோதிக்கப்பட்டு, அடுத்த இரண்டு நாட்களுக்குள் அரசிடம் முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
















