முடிவுக்கு வரும் ரஷ்யா- உக்ரைன் போர்? : பிரதமர் மோடி முன்முயற்சி, அதிபர் புதின் பாராட்டு - சிறப்பு தொகுப்பு!
Oct 7, 2026, 06:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முடிவுக்கு வரும் ரஷ்யா- உக்ரைன் போர்? : பிரதமர் மோடி முன்முயற்சி, அதிபர் புதின் பாராட்டு – சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 7, 2026, 06:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு தரப்பினருடனும் நேரடியாகப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது. இதன் மூலம் ரஷ்யா- உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் தனது முயற்சிகளை இந்தியா முதல் முறையாக வெளிப்படுத்தியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

ரஷ்யா – உக்ரைன் போரை அமைதியான முறையில் முடிவுக்குக் கொண்டுவர பாரதப் பிரதமர் மோடியிடம் மிகவும் நல்ல யோசனைகள் இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் கடந்த வாரம் பாராட்டியிருந்தார்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் Valdai Discussion Club மாநாட்டில் உரையாற்றிய அதிபர் புதின், பிரதமர் மோடியின் அமைதி முயற்சிகளைப் பற்றிப் பல்வேறு தகவல்களை முதல்முறையாக பகிர்ந்து கொண்டார்.

இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே மிகச் சிறந்த மற்றும் நட்புறவு ரீதியான உறவு இருந்தபோதிலும், பிரதமர் மோடியைச் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்த கேள்விகளை தொடர்ந்து எழுப்பி வருகிறார் என்று அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வைக் காண்பதில் பிரதமர் மோடி மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாகவும், அதற்கான நல்ல ஆலோசனைகளை வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ள அதிபர் புதின், இதில் நடுநிலையான நிலைப்பாட்டை இந்தியா கொண்டிருப்பதாக பாராட்டியுள்ளதுடன் அமைதியை விரைவில் நிலைநாட்ட வேண்டும் என்ற நோக்கில் செயல்படுவதற்காக பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட நன்றியைத் தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடியும் அதிபர் புதினும் சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து, உக்ரைன் போரை ராஜதந்திர ரீதியாகவும் பேச்சுவார்த்தை மூலமும் தீர்ப்பதற்கான இந்தியாவின் முயற்சிகளை பொதுவெளியில் முதல்முறையாக ரஷ்யா அங்கீகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து போர்நிறுத்தம் தொடர்பாக இந்தியா மற்றும் பிற மூன்று நாடுகளிடமிருந்து தனித்தனி முன்மொழிவுகள் தங்களுக்குக் கிடைத்துள்ளதாக உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா கடந்த வெள்ளிக்கிழமை உறுதிபடுத்தியிருந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் நடைபெற்ற Munich Leaders’ Meeting-ல் பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், உக்ரைன்- ரஷ்யா போர் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலம் தீர்வு காண வேண்டும் என்று பல ஆண்டுகளாக இந்தியா வலியுறுத்தி வருவதாகவும், சமீபத்திய மாதங்களில் இந்த விவகாரத்தில் இன்னும் நேரடியான ஈடுபாட்டை மேற்கொண்டு வருவதாகவும் முதல்முறையாக கூறியுள்ளார்.

மேலும் கருங்கடலில் கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், தானிய ஏற்றுமதி மற்றும் எரிசக்தி விநியோகம் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி பிஷ்கெக்கில் நடைபெற்ற ஷாங்காய் உச்சி மாநாட்டில் முடிவில்லாத போரிலிருந்து, போரின் முடிவை நோக்கிய நிலைக்கு மாற வேண்டும் என்று ரஷ்ய அதிபர் புதின் உடனான விரிவான பேச்சுவார்த்தையின்போது பிரதமர் மோடி குறிப்பிட்டதைச் சுட்டிக் காட்டியுள்ள ஜெய்சங்கர், ஐநா பொதுச்சபை கூட்டத்திலும் பிரதமர் மோடியின் இந்த செய்தியையே எடுத்துச் சொன்னதாக கூறியுள்ளார்.

சோவியத் ஒன்றியம் பல வழிகளில் இந்தியாவுக்குத் துணையாக நின்றதைக் குறிப்பிட்டுள்ள ஜெய்சங்கர், இந்த வரலாற்றுச் சிறப்பு கொண்ட உறவு பொருளாதார உறவாகவும் கணிசமாக விரிவடைந்துள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும் ராணுவம், அணுசக்தி மற்றும் விண்வெளி சார்ந்த துறைகளில் மட்டுமில்லாமல் இரு நாடுகளுக்கும் இடையே எரிசக்தி உள்ளிட்ட துறைகளிலும் கணிசமான வர்த்தகம் மற்றும் முதலீடு சார்ந்த பரிமாற்றங்களும் ஏற்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா “திட்டமிட்டே” ஒரு “தனிமைப்படுத்தப்பட்ட சக்தியாக” மாறியுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜெய்சங்கர், தன்னை ஒரு தனித்துவமான நாடாகக் கருதிவரும் சீனாவுடன் மிகக் கடுமையான போட்டியை எதிர்கொண்டு வருவதாக கூறியுள்ளார்.

குறிப்பாக வளர்ந்து வரும் மற்றும் நடுத்தர நாடுகள் அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுடனும் ஒத்துழைப்பைப் பேணிக்கொண்டே, தங்களுக்குள் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் ஆர்வம் கொண்டுள்ளன என்றும் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags: Russian President Vladimir Putinrussia ukraine war peace talksPM ModiIndiaRussia Ukraine war
Share
Tweet
SendShare
Previous Post

தலைமை தேர்தல் ஆணையர் செயல்பாட்டில் ராகுல் என்ன குறை கண்டார் – நயினார் கேள்வி!

Related News

தலைமை தேர்தல் ஆணையர் செயல்பாட்டில் ராகுல் என்ன குறை கண்டார் – நயினார் கேள்வி!

வெற்றிப் பயண திட்டத்தால் வாழ்வாதாரம் பாதிப்பு – தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் வேதனை!

சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணையில் முதலமைச்சர் விஜய் ஆய்வு!

பழனி கோயில் ரூ.100 கோடி நில மோசடி வழக்கு – மேலும் இருவர் கைது!

25 ஆண்டுகள் அரசு தலைமைப் பொறுப்பில் இருப்பேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை – பிரதமர் மோடி

மக்கள் சேவையில் 25 ஆண்டுகள் – பிரதமர் மோடிக்கு அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

முடிவுக்கு வரும் ரஷ்யா- உக்ரைன் போர்? : பிரதமர் மோடி முன்முயற்சி, அதிபர் புதின் பாராட்டு – சிறப்பு தொகுப்பு!

நல்லாட்சி வழங்கியிருந்தால் நீண்ட பரப்புரையில் முதல்வர் ஈடுபட வேண்டிய அவசியமில்லை – கவிதா ஸ்ரீகாந்த்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 9 மாதங்களில் 1,129 கோடி உண்டியல் காணிக்கை!

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் கடற்படை ஆதரவு கப்பலான சூர்யா – நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத் சிங்!

ஓட்டப்பிடாரம் அருகே மின்பாதை அமைக்க எதிர்ப்பு – மின் கோபுரத்தில் ஏறி விவசாயிகள் போராட்டம்!

மதுரையில் பாஜக பேரணிக்கு அனுமதி மறுப்பு – சசிகலா புஷ்பா குற்றச்சாட்டு!

மக்கள் சேவையில் 25 ஆண்டுகள் – விநாயகர் கோயிலில் பிரதமர் பிரதமர் மோடி வழிபாடு!

ராகுல்காந்தி நாடகத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் – கிரண் ரிஜிஜூ

தவெக வேட்பாளர் சத்தியபாமாவின் தேர்தல் செலவு கணக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்; தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் மனு

மீனவர்களை விடுவிக்க தூதரக ரீதியில் நடவடிக்கை; மத்திய அரசு தகவல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies