மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் கடந்த 6ம் தேதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில், மதுராந்தகம் தொகுதியில் மட்டும் 27 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தற்போது, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தவெக, திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் மட்டுமே டெபாசிட்டை தக்க வைத்துள்ளன. தனித்துப் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உட்பட 24 பேர் டெபாசிட் இழந்துள்ளனர். அதேபோல் தாராபுரம் தொகுதியில் 22 பேர் போட்டியிட்டனர். இதில் இந்திய கம்யூனிஸ்ட், நாம் தமிழர் வேட்பாளர்கள் உட்பட 19 பேர் டெபாசிட் இழந்தனர். குறிப்பாக தமிழகம், புதுச்சேரி, மேற்குவங்கம் ஆகிய 3 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்த ஒரே கட்சி என்ற அவல நிலையை கம்யூனிஸ்ட் கட்சி சந்தித்துள்ளது.
















