பிரதமர் மோடி சென்னை வருகையையொட்டி 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அக்டோபர் 11ஆம் தேதி சென்னை வருவதை முன்னிட்டு, காவல் ஆணையர் அமல்ராஜ் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பிரதமரின் வருகையையொட்டி, சென்னை விமான நிலையம், போரூர் மெட்ரோ ரயில் நிலையம், ஐஐடி வளாகம், நந்தம்பாக்கம் வர்த்தக மையம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, தங்கும் விடுதிகள், ரயில் நிலையங்கள் மற்றும் முக்கியச் சாலைகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், மீனம்பாக்கம், கிண்டி, கோட்டூர்புரம், போரூர், நந்தம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னையில் அக்டோபர் 11ஆம் தேதி ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழிக் கருவிகளைப் பறக்கவிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
















