தமிழகத்தில் 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்…
பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி நாளை தமிழகத்திற்கு வருகை தருகிறார்.
சென்னையில் நடைபெறும் விழாவில் பங்கேற்கும் அவர், 4 ஆயிரத்து 900 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்கவுள்ளார்.
3 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், முடிவுற்ற பணிகளையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார்.
அம்ரித் பாரத் ரயில் திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்ட பழனி, வேலூர் கண்டோன்மென்ட், அம்பாசமுத்திரம், பரமக்குடி, நாமக்கல் ஆகிய 5 ரயில் நிலையங்களையும் திறந்து வைக்கிறார்.
காரைக்கால் – பேரளம் இடையே 550 கோடி ரூபாய் செலவில் 23 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாதை மற்றும் 3 ரயில்வே மேம்பாலங்களையும்
சென்னை ஐஐடி-யில் உள்ள சுதா கோபாலகிருஷ்ணன் மூளை ஆராய்ச்சி மையத்தையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
சென்னை மணலியில் ஆயிரத்து 620 கோடி ரூபாய் மதிப்பிலான லூப் ஆயில் உற்பத்தி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டவுள்ள பிரதமர் மோடி,
தமிழ்நாட்டில் கடல்சார் உட்கட்டமைப்பை வலுப்படுத்தவும், சரக்குகளை கையாளும் திறனை அதிகரிக்கவும் சென்னை துறைமுகத்தில் 4 உட்கட்டமைப்பு திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.
ஒட்டுமொத்தமாக சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டங்களை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது…
















